Jaya Jaya Sankara Hara Hara Sankara – A very important quote! Ram Ram
வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, “நான் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது த்யாகத்தாலும், தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ண வேண்டும்; அதைவிட முக்யமாக த்யாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் பண்ணிவிட வேண்டும். “ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அஹங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் ப்ரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் ப்ரயோஜனமிராது. தாற்காலிகமாக ஏதோ நன்மை நடந்தது போல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால் அது நின்று நிலைத்து விளங்காது. –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is no point in performing different kinds of charities, if the ego is not sacrificed. The thought that “I have made these sacrifices” should also be sacrificed. Otherwise the inflated ego will swallow all the spiritual benefits reaped from these sacrifices. Even when a social service is performed, if the ego is not sacrificed, neither the doer nor the world will be benefited by his service. There may be an apparent benefit; but it will not be long lasting. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply