Periyava Golden Quotes-258

AP_Bikshavandanam

யாகத்திலே நெருப்பில் வஸ்துக்களை, உடைமைகளைப் போட்டு த்யாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்கு ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, ஸுபிக்ஷம் நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அநுக்ரஹம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடைமையை வேள்வித் தீயில் த்யாகம் பண்ணி இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும். சொத்து ஸ்வதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு அநுபவிப்பதில் பெறுகிற ஸுகம் ரொம்பவும் தாற்காலிகமானது. இந்தத் தாற்காலிக ஸுகம் நித்ய ஸெளக்கியமான ஆத்மாபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது. ஆனால் இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே பரம ஆனந்தத்தை தருகிறது; சாஸ்வத ஸெளக்யத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான “ஈசாவாஸ்ய” த்தில் முதல் மந்த்ரத்திலேயே, “த்யாகம் பண்ணி அநுபவி” என்று சொல்லியிருக்கிறது. காந்திகூட இதில்தான் தம்முடைய ஃபிலாஸஃபி முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த உபநிஷத்தை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ஸ்லோகித்து வந்தார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

When one’s possessions are sacrificed in the ritualistic fire of the Yaagams, the divine powers are pleased and they bless this earth with plentiful rains and good thoughts. So, we should offer our possessions to the sacrificial fire for the benefit of the mankind. There is no point in enjoying our possessions for our own material benefit. The happiness derived from this is temporary and is harmful to our spiritual development in the long run.  But when we give up these possessions, the happiness we derive is immense and it also leads to eternal happiness.this is the reason “Esaavaasya Upanishad”, the first of the Upanishads enjoins us to sacrifice and enjoy. Mahatma Gandhi also declared that his philosophy was based on this and paid encomiums to the greatness of this Upanishad. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. “Isaavasya Upanishad” has been wrongly written in English in the third line from the bottom. Kindly arrange to correct the same

Leave a Reply

%d bloggers like this: