Jaya Jaya Shankara Hara Hara Shankara – Sri Periyava as Lord Vaitheeswaran; how even poisonous creatures are toned down in Sri Periyava Sannidhi! Thanks to Shri Raghu for the Whatsapp share and Smt. Anu Sriram, our sathsang seva volunteer for the translation. Ram Ram
மயிலாடுதுறை அருகில் உள்ள ஒரு கிராமம் கோழிக்குத்தி. அங்கு வசித்து வந்த ஹாலாஸ்ய நாதன் – சரஸ்வதி என்ற தம்பதியர் பெரியவாளிடம் பக்தி கொண்டு அவரை அவ்வப்போது தரிசித்து வருவதுடன் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பெரியவாளிடம் நேரிலோ அல்லது வீட்டில் அவர் திரு உருவப்படம் முன்போ முறையிட்டு அருள் பெறுவது வழக்கம். ஒரு முறை ஹாலாஸ்யம் தன் குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்று கருணைக்கடலை தரிசனம் செய்தார். பெரியவாள் மூங்கில் தட்டி மறைப்பால் செய்த குடிலில் இருந்து தரிசனம் வழங்கும் போது எதிரில் அறைக்கு வெளியே நின்ற ஹாலாஸ்யத்த உள்ளே வரும்படி அழைக்க அவர் மட்டும் உள்ளே சென்றார். பெரியவாளிடம் உரையாடிக் கொண்டிருந்த ஹாலாஸ்யத்தை திடீரென வந்த ஒரு பெரிய கருந்தேள் கொட்டிவிட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்தது. தாளாத வலியின் கடுப்பால் அவதியுற்ற ஹாலாஸ்யம் பெரியவாளையும் கொட்டிவிடும் என்று பதறி ‘தேள் தேள்” என அலறினார்.
பிரேமையின் வடிவான பெரியவாள் சலனமில்லாமல் ஹாலாஸ்யத்தை பார்த்து ‘என்ன தேள் கொட்டிடுத்தா? தேள் கொட்டினால் எப்படி இருக்கும்? என்ன பண்ணனும்? என வினவினார். ‘தேள் கொட்டினா ரொம்ப வலிக்கும். மயக்கமாவரும்’ என்றார் ஹாலாஸ்யம். ‘இப்ப அப்படி எல்லாம் இருக்கா? இல்ல எறும்பு கடிச்சாப்பல இருக்கா? என்று பெரியவாள் கேட்டார். என்ன அதிசயம்! ஹாலாஸ்யத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த கடுப்பு மறைந்து எறும்பு கடித்தது போல வலி குறைந்தது.
உடனே பெரியவாள் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘மூலையில் ஊறும் தேளை எடுத்து வெளியே போடு’ என உத்தரவிட வந்த சிப்பந்தியும் சர்வ சாதாரணமாய் தேளின் கொடுக்கை சரியாகப் பிடித்து எடுத்து வெளியே போட்டார். இதைக் கண்ட அனைவருக்கும் உடம்பு வேர்த்தது. மஹான்கள் சந்நிதியில் விஷ ஜந்துக்கள் கூட தங்கள் இயல்பான தன்மையை இழந்து நல்ல குணம் பெறும் போலும்! இந்த உண்மையை நிதர்சனமாகக் கண்ட அனைவரும் வியந்தனர். பெரியவாள் சாக்ஷாத் வைத்தீஸ்வரனே என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
அன்றிலிருந்து ஹாலாஸ்யத்தின் ஊரில் யாருக்காவது தேள் கொட்டினாலோ விஷக்கடி என்றாலோ அவருடைய வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவரும் உடனே கை கால்களைக் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு நடமாடும் தெய்வம் திரு உருவப்படத்தின் முன் நின்று வந்தவருக்கும் திருநீற்றைப் பூசி பெரியவாள் திருநாமத்தை மூன்று முறை உரக்க அழைத்து மனமாற வேண்டுவார். உடனே விஷம் இறங்கி வலி தெரியாமல் போவது தான் பேரதிசயம். இது தான் நாடிவந்தவரின் பிணிக்கு மருந்தாகும் பெரியவாள் மஹிமை.
There is a place called “ Kozhikuthy” near Mayiladudurai. There lived a devout couple by the name Halasya nathan and Saraswathy. Every grievance they had, they used to submit before Periyava either in person or before His picture in their house. Once they went to seek His darshan with their entire family. At that time, Periyava Who was giving darshan from within the confines of a bamboo enclosure, asked Halasya alone, who was standing outside , to come inside. During the course of their conversation, suddenly a scorpion struck Halasya and headed towards the direction of Periyava. Plagued with pain, Halaysa, fearing that the scorpion might strike Periyava too, shouted “ Scorpion, scorpion “ !
Periyava, the embodiment of kindness, unperturbed , looked at Halasya and asked him “ Did a scorpion sting you? How does it feel when a scorpion stings you ? What happens to you ?” Halasya murmured “ It pains a lot when the scorpion stings. You can also get unconscious”. Then Periyava continued “ Do you feel all that now? Or does it feel like an ant- bite?”
Wonder of wonders!. The pain which Halasya was experiencing reduced significantly and there was only a small throbbing as in an ant – bite.
Immediately Periyava gestured an attendant nearby and directed him to carefully remove the scorpion and leave it outside. The attendant also effortlessly lifted the scorpion by its tail and removed it outside the hut. All the people there were awestruck. Even poisonous creatures forget their nature in the presence of Mahans and obtain good qualities ! This incident alone is proof that Periyava is Lord Vaitheeswaran Himself.
From that day onwards, whenever people in his village used to suffer from a scorpion or any other poisonous insect bite they sought Halasya for relief.
Halasaya , would immediately, wash his hands and legs , and after appearing vibuthi would stand before Periyava’s picture in his house . He would apply vibuthi to the affected person as well and then would loudly recite Periyava’s name thrice , sincerely praying for the victim’s relief. The pain would disappear almost instantaneously. This wonder can only be attributed to Periyava’s greatness.
Categories: Devotee Experiences
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!
A new post which i havent heard so far. Thanks .Shri Mahaperiyava, Charanam
I feel in Tamil “Thel” is not scorpion in English, please correct me if I am to correct
பெரியவா அழைத்து அவரருகில் வந்தவரைத் தேள் கொட்டியது என்றால் இதில் ஏதோ சூக்ஷ்மம் இருக்கிறது! வரவிருந்த பெரிய ஆபத்தைத் தேள்கடியால் நீக்கினார் போலும்.
தேளை அடிக்காமல் அதன் கொடுக்கைப் பிடித்துத் தூக்கி வெளியில் விடும் வழக்கம் ஸ்ரீ ரமண பகவானின் சன்னிதியிலும் பின்பற்றப்பட்டது.
சிறிய நாட்டு ஓடு வேய்ந்த கூறை யுள்ள வீடுகளில் வெயில், மழைக் காலங்களில் தேள் நடமாட்டம் இருக்கும்.கொடியில் உலரும் வேஷ்டி, துணிமணிகளைக்கூட நன்றாக உதறித்தான் எடுத்து அணியவேண்டும். அப்போதெல்லாம் வீடுகளில் சாணிஉருண்டை இருக்கும். எச்சில் இடவும். தினமும் இரவில் அடுப்பு, கும்மட்டி மெழுகவும் சாணிவேண்டும்! ஆனால் சாணி உருண்டையின் அடியில் தேள் இருக்கும்- பார்த்துத்தான் கைவைக்க வேண்டும்!
இவ்வளவு இருந்தும் நம்மவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? நாங்கள் திருச்சிப் பக்கம். எங்கள் வீட்டில் ஒரு சிறிய உண்டியல் இருக்கும். தேளைக்கண்டவுடன் அந்த உண்டியலில் ஏதோ காசுபோடுவார்கள்- அது ஆள்கொண்டேஶ்வரருக்கு வேண்டிக்கொண்டு போடுவது. இது திருவையாறில் உள்ள ஸ்வாமி பெயர் .. யாராவது திருச்சி, தஞ்சாவூர் என்று போனால் உண்டியலில் சேர்ந்த காசைக் கொடுத்தனுப்புவார்கள்!
என் தாத்தாவிற்கு தேள்கடிக்கு மந்திரிக்கத் தெரியும். தேள் கொட்டியவரின் கையையோ, காலையோ நீட்டச் சொல்லி அதன் எதிரில் அமர்ந்து கொள்வார். மேல்துண்டின் ஒருமூலையை வலது அக்குளில் அடக்கிக்கொண்டு, வலது கையினால் துண்டின் இன்னொரு மூலையை மந்திரம் சொல்லி தரையில் சுற்றிச் சுற்றி அடிப்பார்.தேள்கடியின் நெறி இவர் கைக்கு வந்துவிடும்! ஏதோ மந்திரம் சொல்லி, தன் கையை மூன்றுமுறை தடவிக்கொடுத்து உதறுவார்- வலி நீங்கிவிடும்!
தேள்கடிக்குப் பரிகாரமாக ஒரு யந்திரம் வரைவதைச் சொல்வார்கள். 1964/65ல் ஸ்ரீ ரமணாசிரமத்திலிருந்து வெளிவந்த “மவுன்டன் பாத்” பத்திரிகையில் இது வந்தது. தேள் கொட்டிய இடத்திற்குக் கீழ் பேனாவினால் இந்தப் படத்தை (முக்கோணம், சதுரம் போன்றவை அடங்கியது) வரையவேண்டும். ஆனால் பேனாவின் நிப்பு எந்த உலோகத்தினால் ஆனதாக இருக்கவேண்டும் என்ற நியதி உண்டு – இன்று எனக்குச் சரியாக நினைவில்லை!
இப்படி எத்தனையோ வழிகள்! நாகரீகத்தின் பிடியில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்! .பொதுவாக வசதிகள் இல்லாத குட்டிக் கிராமத்தில் இருந்தாலும் ஏதோ சத்தியம்-தர்மத்திற்குக் கட்டுப்பட்டுதான் வாழ்க்கை நடந்தது என்று தெரிகிறது! விஷ ஜந்துக்கள் அதிகம் தீமை செய்யவில்லை என்றே தோன்றுகிறது!