Periyava Golden Quotes-248

album2_13

நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் “தத்த : – தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு” என்பதுதான். நம் இஷ்டம், இஷ்டமில்லை என்பதற்கெல்லாம் இடமில்லாமல், இது நமக்கு வேதம் போட்டிருக்கிற ஆஜ்ஞை! மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த “தத்த” மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக் காட்ட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Many of us receive the Upadesa (formal instructions from a teacher) for chanting different Manthras like Siva Panchakshari, Narayana Ashtakshari, Shadashari for Muruga, Rama Manthra, Krishna manthra, and Devi Manthra. We choose this Manthra, according to our leanings. But the Holy chant given to all of us by Upanishada, the crown of Vedas is “Dhaththa” – Give, Do Dhaanam. Be a Philanthropist. There is no question of like or dislike here. This is the Command given to us by our Vedas. The other Manthras have to be chanted. This ‘Dhaththa’ manthra has to be practiced. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: