Jaya Jaya Shankara Hara Hara Shankara – Is there any greater definition for Bhakthi than explained by Sri Periyava below? Thanks to Smt.C.P. Vijayalakshmi, our sathsang seva volunteer for the translation. Ram Ram.
பக்தி
ஒரே பேரறிவுதான் இத்தனை பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றுகிறது. இந்தத் தோற்றத்தைப் போக்கடித்துவிட்டால், அந்த பேரறிவுதான் எஞ்சி நிற்கும். அந்த நிலையில் காரியம் எதுவுமே இல்லை. பிரபஞ்சம், ஜீவ ராசிகள் என்கிற தோற்றங்கள் இருக்கிற வரையில்தான் பல விதமான காரியங்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கடந்து, இவற்றுக்கு மூலமான பேரறிவை அடைந்துவிட்டால், முடிவில் அறிகிறவன், அறிவு, அறியப்படுகிற வஸ்து என்கிற பேதங்கள்கூட இல்லாமல் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அதைத்தான் பிரம்ம ஸாக்ஷாத்காரம் என்பது, இதுதான் ஜீவாத்மாவின் மாறுபடாத, சத்தியமான நிலை.
ஆனால் இந்த சத்தியமான நிலையை நாம் தெரிந்து கொள்ளாமல், வெறும் தோற்றமான பிரபஞ்சத்தையும், ஜீவராசிகளையுமே மெய்யென நம்பி வாழ்கிறோம். இதற்குக் காரணம் மாயை. மாயாசக்தியால்தான் ஒரே பிரம்மம் இத்தனை வெவ்வேறு வஸ்துக்களைப்போல் தெரிகிறது. மாயப் பிரபஞ்சம் ஒர் அற்புதமான நியதியில் நடக்கிறது. பலவிதமான இயற்கை விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டு, அதன் பிரகாரமே பிரபஞ்சம் நடக்கிறது. காரியமே இல்லாத பிரம்மம் மாயையால் பிரபஞ்சமாகத் தோன்றுகிறபோது சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் முதலிய காரியங்கள் எல்லாம் நடக்கின்றன. காரியம் இல்லாத நிலையில் எதைப் பிரம்மம் என்கிறோமோ, அதையே இந்தக் காரியங்களைச் செய்கிறபோது ஈஸ்வரன் என்கிறோம். காரியம் இல்லாத பரம் பொருளை நிர்குணப் பிரம்மம் என்றும், அதுவே காரியத்தில் இருக்கிறபோது ஸகுணப் பிரம்மம் அல்லது ஈஸ்வரன் என்றும் அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும். ஈஸ்வரன், பகவான், கடவுள், தெய்வம், ஸ்வாமி என்று சொல்வதெல்லாம் இந்த ஸகுணப் பிரம்மத்தையே.
எப்போது பார்த்தாலும் காரியம் செய்து கொண்டிருப்பதே நமக்கு இயல்பாகிவிட்டது. உடம்பால் காரியம் செய்யாத போதும், வாக்கால் பேசி காரியம் செய்யாத போதும் கூட, நம் மனசு சதா எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் காரியம்தான். இந்தக் காரியம் நின்றால்தான், அதாவது மனஸில் எண்ணமே தோன்றாமல் இருந்தால்தான், எந்தக் காரியமும் இல்லாத பிரம்ம நிலையை அடைய முடியும். ஆனால் இந்த மனஸில் ஒரு க்ஷணம்கூட அதையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லையே! இதை எப்படி நிறுத்தப் பழகுவது?
இந்தப் பழக்கத்துக்கு வழிதான் பக்தி. காரியமில்லாத பிரம்மத்தை நாமும் காரியமில்லாமலிருக்கிற நிலையில்தான் அநுபவிக்க முடியும். அது முடியவில்லையா? அதே பிரம்மம் சகல பிரபஞ்சங்களையும் நடத்தி வைக்கிற – அதாவது காரியத்தைச் செய்கிற – ஈஸ்வரனாக இருக்கிறதல்லவா? இந்த ஈஸ்வரனையே ஸதா சிந்தனை பண்ணு. காரியத்தை எல்லாம் அதற்கே திருப்பு. உடம்பால் நமஸ்காரம் பூஜை, வாக்கால் ஸ்தோத்திரம், மனஸால் தியானம் என்று சகல காரியங்களையும் ஈஸ்வரனிடம் செலுத்து. அவற்றை ஈஸ்வரன் அங்கீகரித்து, உன்னை பிரம்ம ஞானத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பான். இப்படிப்பட்ட இடையறாத ஈஸ்வர சிந்தனைக்குத்தான் பக்தி என்று பெயர். இதில் அன்பு ரொம்பவும் முக்கியம். அன்போடு அவனை நினைப்பதே பக்தி.
உலகத்திலுள்ள நல்லது – கெட்டது, அழகு – அவலக்ஷணம், இன்பம் – துன்பம் எல்லாமே பிரம்மத்திலிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை, அடையும்போது நல்லது கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.
ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈஸ்வரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அந்த நிற்குணத்திலிருந்தே சகல குணங்களும் தேன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச்சிதறலில் (Refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா? அப்படியே நிற்குணப் பிரம்மம் மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈஸ்வரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிற்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார சாகரத்தில்தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும்கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப்படைத்து வைத்துக்கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.
மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைத்தாலும் அதுவாகவே மாறுகிறது. இதை மனோதத்துவக்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். தோஷங்கள் அற்ற கிருபா சமுத்திரனான பகவானைத் தியானம் செய்து கொண்டே இருப்பதால் நம்முடைய தோஷங்கள் விலகி, நாம் அன்பு மயமாகிறோம். உண்மையான பக்தி வைத்துவிட்டால் அப்புறம் மனசு அன்புமயமாகிவிட, அதன்பின் அது பாபத்தில் பிரவேசிக்கவே செய்யாது. உலகத்தில் பாப எண்ணங்கள் விலகுவதற்கு பக்தியைவிட வேறு வழி இல்லை. ஆனால் பக்தி செய்வதற்கு இது மட்டும் காரணம் இல்லை. நாம் சத்தியமான நிலையை அடைவதற்கு பக்தி வழி பண்ணுகிறது என்பதுதான் முக்கியமான காரணம். மனசு என்பதே நின்றுப்போய், ஆத்ம ஜ்யோதிஸ் அப்படியே பளீரென்று அடிப்பதற்கு முன்னதாக அந்த மனதிலிருந்து பாப அழுக்கு போக வேண்டும். இப்படிப் பாபத்தைப் போக்குவதே பக்தி.
Bhakthi
The one and only Supreme intelligence manifests itself as all these universes and living beings. If these appearances are negated, then that Supreme intelligence alone remains. In that stage, there is no activity. Only as long as the semblance of Universe and living beings remains, there is a need for different kinds of activity. Once a person goes beyond these appearances and reaches that Supreme Intelligence, which is the root cause of everything, the seeker of Knowledge, Knowledge and what is revealed by the Knowledge merge into one and all distinctions among these three vanish. This is the unchanging Truth about Jeevathma, the living being and this is Brahma Saakshaathkaaram, the ultimate revelation of Brahmam, the Supreme Being, the ultimate God Head.
But, unaware of this true situation, we believe the transient universe and living beings to be the Truth. The reason for this misapprehension is Maya. It is because of the power of Maya that the One and Only Brahmam appears as different objects. This Universe, propelled by the power of Maya operates according to an unbelievable game plan. Various laws of Nature have been devised, according to which the Universe operates. When the inactive Brahmam manifests itself as the Universe, various activities like Creation, Protection and Destruction take place. (Srishti, Paripalanam, Samhaaram). What, in its inactive stage is called Brahmam, is named Eshwara in this active stage. The Holy Scriptures of Advaitha state that the Inactive Supreme is Nirguna Brahmam (Formless) and the Active Supreme is Sagunabbrahmam. It is the Saguna Brahmam (Form) which is called Eshwara or God.
Immersing ourselves in activity has become our second nature. Even when we are not active physically or orally, we are still a prey to thoughts. This is also a form of activity, indeed. Only when the mind is free of even a single thought, we will be able to attain that state of Brahmam, which is supremely inactive. But our mind finds it impossible to remain thoughtless even for a second. How to put an end to this?
The only solution is Bhakthi or devotion. We can experience the inactive Brahmam only in a state of inactivity. That seems to be impossible. But that very Brahmam performs all the activities as Eshwara. So dwell constantly upon Eshwara. Divert all your activities towards Him. Worship and perform obeisance with your body, recite shlokas with your voice, meditate with your heart and thus direct all your activities towards God. He will accept them and take you towards the Knowledge of the Ultimate or Brahma Gnanam. This uninterrupted contemplation of God is Bhakthi or devotion. Love is a very important factor of this devotion. Devotion is nothing but thinking of Him with love.
All that is good or bad, ugly or beautiful and sad or joyful in this world were created only from Brahmam, that Supreme Being. When the confluence of Jeevaathma and Paramaathma takes place (as the temporal being merges with the Supreme Being), all these distinctions disappear.
But we exist in a state where the ultimate oneness is not realized by us. In this state of our being, we should visualize Eshwara as the embodiment of all that is good, beautiful and joyful. It is impossible for us to even think about Nirguna Brahmam, that Supreme Being without any attributes of its own. All attributes have arisen only from this attribute-less Supreme Being. The colorless sunlight, when passed through a prism, splits into the colors of the spectrum. In a similar way, the attribute less Nirguna Brahmam when reflected through the prism called Maya, gives out all attributes.
We cannot dwell on the attribute–less Nirguna Brahmam. But we can definitely contemplate the attributes themselves. But if we ponder over the negative qualities, it will increase our sufferings and drag us down into the quagmire of Samsaaram, or earthly life. So we should think of the Godly qualities or “Kalyana Gunangal”. One more difficulty arises here. It is not easy to contemplate qualities in abstraction. So we should think of a living being with all the Godly qualities. We should continue to lovingly meditate on that Godhead, the ultimate source of all forms, lives and attributes and the puppeteer behind the entire drama of Universe, in His Godly form as the embodiment of all Godly qualities. In the course of time, all these qualities will become our own.
Whatever the mind constantly and deeply thinks about, it becomes the same. All psychologists agree upon this. When we continue to contemplate the Ever Merciful, faultless God, our own negative qualities disappear and we are filled with Love. True devotion not only fills our heart with love but also prevents it from venturing into the path of sin. Devotion is the only means for getting rid of sinful thoughts in this world. But this is not the only reason for practicing Bhakthi or devotion. The important reason for practicing Bhakthi is that it helps us attain the state of Ultimate Truth. Before the mind becomes inactive and the spiritual light illumines us, the sinful dirt must be cleansed from the minds. It is Bhakthi alone which can perform this cleansing.
Categories: Deivathin Kural
Thank you.
Excellent translation. Thanks so much.
Thanks for this post.