Periyava Golden Quotes-245

album2_31

செத்துப் போனவுடனேயே எல்லாரும் மறுபடியும் இந்த பூலோகத்திலேயே பிறந்து விடுவதில்லை. நன்றாக வேலை செய்தால் இன்க்ரிமென்ட் மட்டுமல்லாமல் போனஸும் தருகிறார்கள் அல்லவா? ரொம்ப நன்றாகச் செய்தாலோ ப்ரமோஷனே கொடுத்து மேலே தூக்கி விடுகிறார்கள். வேலையில் தப்புப் பண்ணினால் இன்கிரிமென்டை நிறுத்தி விடுகிறார்கள். பெனல்டி (அபராதம்) விதிக்கிறார்கள். ரொம்ப மோசமாகப் பண்ணினால் கீழே வேலைக்கே தள்ளி விடுகிறார்கள். இதேபோல், புண்யம் பண்ணினவர்களுக்கு, இன்கிரிமென்ட் மாதிரி இந்த பூலோகத்தில் ஸெளக்கியமான இன்னொரு ஜன்மா கிடைப்பதற்கு முன்னாடி ஒரு போனஸ் கிடைக்கிறது. ஸ்வர்க வாஸம்தான் இந்த போனஸ். ரொம்பப் புண்யம் பண்ணியிருந்தால் ஸ்வர்க்க லோகத்துக்கே நிரந்தரமான ப்ரமோஷன். இப்படியே பாபம் பண்ணினவர்கள் முதலில் பெனல்டியாக நரக லோகத்தில் வஸிக்க வேண்டும். அப்புறம் இன்க்ரிமென்ட் இல்லாத மாதிரி பூலோகத்தில் கஷ்டத்திலே பிறக்க வேண்டும். ரொம்பப் பாபம் பண்ணினால் கீழ் வேலைக்கே போகவேண்டியது – நிரந்தர நரகவாஸம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


After death, everybody is not born into this world again. In our official place of work, if we work hard, we not only get increment but also bonus. If we perform extraordinarily well, we are rewarded with promotion. If we bungle in our job, increment is withheld and penalty is levied. Similarly, those who have earned Punya through their good deeds get a bonus before they are born into this world again. This reward is nothing but Swarga Vaasam or a place in the heaven. If the credit of Punya is huge, the person gets a permanent place in the heaven. On the other hand, people who have sinned must go to hell or Naragam as a penalty and afterwards be born to suffering in this world-the increment has been withheld. If the sin is immeasurable, he is confined to hell forever. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Superb Explanation by relating to Work place scenario . Thanks

Leave a Reply

%d bloggers like this: