13. Gems from Deivathin Kural-Bhakthi-Naama Mahima

album1_27

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara – The significance of Bhagawan Nama has been explained by Sri Periyava in this chapter. Nowadays there are many gurus & upanyasakas propagate Bhagawan Nama Sangeerthanam which is the Kali Yuga Dharma. With due respects to them, there is a vital difference between what they say and Periayava says here. Read and find out what it is 🙂 Another request for all Aastheeka’s is to never call people by short names but by their full name, especially if the name is a Bhagawan Nama. This has also been told by Sri Periyava himself in Periyava Kural. Thanks to Smt. Bharathi Shankar, our sathsang seva volunteer for the translation. Ram Ram

நாம மகிமை

தியானம், ஜபம், பூஜை, யக்ஞம், க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாகக் கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.

கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம்; தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈசுவரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமுதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (individual basis) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (Congregational worship)யும் இருக்கிறது.

இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. ‘ரகுபதி ராகவ ராஜாராம்’, ‘ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே’ என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.

பஜனைக்கூடம் என்ற ஓர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு.

இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது நாம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.

பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதில் பகவானின் நாம சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. ஸ்ரீபகவந்நாம போதேந்திரர்கள், “ஸதாநந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேசுவரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ‘ஹரி’ ‘சிவ’, முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான்” என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமல்ல. மூர்த்தியைப்போல அவையும் ஸாக்ஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.

இவ்வாறு நாம சங்கீர்த்தனத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாக்ஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கீதங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பதற்கு இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம ஸங்கீர்த்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது: கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.

பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவந் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் – அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாடவேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும். அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு இடம் ஏது? பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, ‘அம்மா அம்மா’ என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.

Bhagawan Naama Mahima

From time immemorial, the practice of singing the names of Bhagawan and praising Him in groups has been existing in our nation, just like so many other rituals like meditation (Dhyanam), recitation of Mantras (Japam), performing Pooja, offering in fire (yagnyam), and undertaking pilgrimages.

Naama Bhajanai (Bhajans) or singing the names of Bhagawan, has been followed in the country as a great tool to communicate to God and to achieve the communion between Jeevathma (the soul) and Paramathma (The Supreme Being). Almost every village and town has a Bhajanai Madam or a Bhajan Hall which stands as a testimony for the rich growth of the Bajan culture in the country, thus enabling us to judge its long historical background. People gathered in groups and sang bhajans every Saturday and during auspicious days like Ekadasi.

In temples we watch poojas being performed and meditate upon God, whereas while singing Bhajans, we sing aloud God’s various names, His innumerable qualities and His Divinely pranks, thereby involving our mind in Divine pursuits. Bhajans possess the special quality of uniting so many people at one place which is the basic tenet of social life.  Though the principal worship of Hinduism is formed on individual basis, the stress being laid on individual well-being resulting in the collective well-being of all humans on earth, there has also been a stress on congregational worship through temple festivals and singing bhajans.
Singing of Bhajans which are set to melodious music, accompanied by various musical instruments, attracts all hearts and directs them to the continuous thinking of God. It is easier to remind ourselves of God while singing bhajans like “Raghupathy Ragava Raja Ram” and “Hare Rama Hare Rama Rama Rama Rama Hare Hare” in which simple words are combined with mellifluous music in an attractive way.

Apart from assembling at one place called the Bhajan Hall, there is also the practice of Nagara Sangeerthanam, in which people walk through the streets singing the divne names (namaas) of Bhagawan on auspicious days like Vaikunda Ekadasi. Especially in the month of Margazhi (December) it is customary for the people to walk through every street in the town, singing bhajans and spreading the fragrance of Bhagawan Nama.

This great habit should again be cultivated and brought to a fresh lease of life. We should not let the Bhajan Halls of the villages go silent without the singing of Bhajans. Of late there is a steady growth in Bhajan culture which calls for happiness. At a time when all our Vedha Paarayanam, temple culture, and austere habits are slowly dwindling, if there is one aspect of our religion that hasn’t weakened and is growing healthy day by day, it is only our Bhajan culture. In every town today, the bhajan groups remain to be the only sathsangs for our religion. This at the least brings some solace and happiness.

Bhagawan’s Naama Sangeerthanam and singing his divine qualities have attained an important place in developing Bhakthi for Him. Sri Bhagawan Naama Bodhendrar Swamigal (one of the predecessors of Maha Periyava and one who was instrumental in spreading Rama Nama) has said “Paramathma, who is Happiness personified, assumed the forms of Vishnu and Parameswaran with utmost compassion for the sake of universal well-being. But thinking as if that just those forms are not enough to redeem the world, He became Naamas like ‘Hari’ and ‘Siva’ and is awake and alive in them forever.” That is to say that Naamas are not just names; like His various forms, they too are absolute God Himself. Naamas possess the entire power that is possessed by Bhagawan.

Like this, singing the hymns that have originated from the holy faces of divine men who have assimilated the original form of Bhagawan, eliminates all our sins and multiplies our Punya. The various songs composed by Jayadevar, Theertha Narayanar, Ramadasar, Purandhara Dasar, Thyaga Brahmam and Sadasiva Brahmendraal are sung under the Bhajan Pathathy (tradition) of Sampradaya Bhajanai devised by Marudhanallur Sathguru Swamigal. They celebrate singing Bhajans as great festivals like Dolothsavam, (swing festival), Kottanothsavam and Vasantha Keli. These are the methods adopted to simplify the experience of being with God, from a strenuous task to a blissful state of singing and dancing. It is said in Sastras of Bhagawatham itself that Nama Sangeerthanam is the best way to Salvation during Kali Yuga, a time which has neither power nor convenience for the perseverance of austere religious habits. “Kalau Sangeerthya Kesavam.”

Let the Bhajans sung by many people as a group, be kept at one side. In every family, all the members should assemble in the evenings at home and sing the Bhagawan Naamas and do the bhajans at least for ten minutes every day. There is no strain in this act to make it impossible. All the family members should assemble in the Pooja room, or in front of a Kuthu Vilakku (traditional oil lamp) if there is no separate room for Pooja, sit before it and sing bhajans. Naamavalis (Bhajans) should be sung by all. Every one of you should first perform your daily duties (Anushtanams/Sandhyavandanam) without fail and then should do the Bhajanas. There is absolutely no need to feel shy at all to sing and praise God. Where is the place for shame to sing the names of Bhagawan who is the personification of compassion? It is perfectly alright even if there is no great musical knowledge, Raaga Bhava or sweet voice in our singing. Only the Bhakthi Bhava is important. Doesn’t the child, which is indulging in various playful activities, call out to its mother as “Amma, Amma” as soon as it remembers her suddenly? There is no shame or musical beauty in it. Likewise we should take some time between our earthly pursuits to remember Bhagawan, who is the Universal Mother, and should call out His names as Rama, Krishna, Siva, and Amba. This habit is a precious treasure which can multiply our day to day well-being and happiness.



Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. Please clarify what is the difference between what Sri Periyava says about nama sankeerthana and what nama parayana pracharakas say. The difference is not clear to me merely by reading through periyava’s statements. Hare Rama Hare Rama Raama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare

    • I have highlighted the difference. Here it is below. Ram Ram.

      அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: