தானம் என்று பண்ணினால் அதை வாங்கிக் கொள்ளவும் ஒருத்தன் இருந்தாகணும். Donor இருந்தால் Donee-யும் இருக்கணும். ஆனால் தானம் கொடுப்பதை ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிற அதே சாஸ்திரங்களே தானம் வாங்குவதை மிகவும் தாழ்வானதாகச் சொல்லியிருக்கின்றன ஏற்பதற்கு ஒருத்தன் இல்லாவிட்டால் எப்படி ஈவது? யாசகன் இல்லாமல் தாதா ஏது? இப்படி யாசகம் வாங்குவதை ரொம்பவும் இழிவாகச் சொன்னதற்குக் காரணம் அத்யாவசியமிருந்தாலொழிய பிறத்தியானைப் பிடுங்கக் கூடாது என்பதால்தான். ஸம்பாத்தியம் அவனவனும் உடம்பாலோ புத்தியாலோ உழைத்துப் பெறத்தான் பாடுபடணும். அவனவனுடைய வீட்டின் நல்லது கெட்டத்துகளுக்கான செலவுகளையும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அவனவனேதான் ஸேமித்துக் கொள்ளணும். தவிர்க்கமுடியாத unemployment, வியாதி வக்கை, நிராதரவான நிலையில்தான் யாசகம் வாங்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
When charity is performed, naturally there is a donor and a donee- a person who gives and a person who receives. But, puzzlingly, the same Shaastraas which exalt doing charity have condemned receiving charity from someone. Unless there is a person to receive, how can anything be donated? How can there be a donor without a donee? The reason that scriptures have said so is only to ensure that we do not receive charity from a person unless there is a genuine reason for it. We should try to earn money through our hard work or intelligence. We should try to manage our household expenditure through our own income. Only when there is an unavoidable circumstance like unemployment or illness, should we receive charity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
Wonderful. Thank u
அதே போல் ஒரு சந்தர்பத்தில் ஸ்ரீ மகாபெரியவர்கள் கூறி உள்ளார்கள் கன்யாதானம் செய்வதும் கன்யாதானம் பெற்றுக்கொள்வதும் மிகவும் விசேஷம் என்று.
Never seen this photo before. Is this Sri Periayva photo?
ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam
Yes, these are all rare collections of Maha Periyava photos. Ram Ram