Periyava Golden Quotes-233

album2_106

தர்மம் என்றால் மநுஷ்ய வாழ்க்கை நெறிகள் எல்லாமும்தான் என்றாலும், பொது வழக்கில் ‘தானம்’ என்ற ஒன்றுக்கு மட்டுமே ‘தர்மம்’ என்ற பேரும் வந்துவிட்டது. தர்மங்களில் இது அத்தனை உசத்தியான இடத்தைப் பெற்று விட்டது! ‘தான-தர்மம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘தர்மம் போடு தாயே!’ என்றுதான் பிச்சைக்காரர்கள் கூடச் சொல்கிறார்கள். தர்மசாலை என்றாலே அன்னசத்திரந்தான். வேதப் பிரமாணத்துக்கு ஸமதையான சிறப்புப் பெற்ற அவ்வை வசனத்திலும் ஈதல் அறம் என்று தானத்தையே தர்மம் என்று equate பண்ணியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Though Dharma encompasses all the principles of a righteous life, in common usage, it has come to specify charity or Dhaanam. Charity has come to occupy such a special place in Dharma or the principles of righteous life. We talk of ‘Dhaana-Dharmam’. Even a beggar pleads with us to perform Dharmam.  Dharmasala has come to signify Anna Chathiram or a shelter that provides free food. Even in the works of Avvaiyaar , the great saint poetess, which enjoy the same status as the declarations of Vedas, charity is equated to dharma. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d