Periyava Golden Quotes-225

album2_60

 

நடுவாந்தரத்தில் ஈஸ்ட் இண்டியா கம்பெனி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைக்கார ராஜ்யம் ஏற்பட்டு இங்கே இங்கிலீஷ்காரர்களின் வழக்கங்கள் புகுந்தபின்தான் நல்ல வைதிக ஆசாரத்துடன் இருப்பவர்களுக்கும் பொது ஸமூஹ ஸேவைக்கும் ஒரு பிரிவினை மாதிரி ஏற்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முந்தியெல்லாம் பரமசிஷ்டர்களும் கூட ஸகல ஸமூஹத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள். லோக க்ஷேமார்த்தம் தொழில்களைப் பாரம்பரியமாகப் பங்கீடு பண்ணிக் கொண்டு, அந்தந்தத் தொழிலைப் பொறுத்து அநுஷ்டானங்களும் ஆசாரங்களும் ஏற்படுவதால் இவற்றில் குழறுபடி உண்டாகி லோக க்ஷேமம் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே பிரிந்து வாழ்ந்தாலும்கூட, பரோபகாரத்துக்கு அப்போது குறைச்சலே இருக்கவில்லை.-ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

Only after the advent of East India Company into India and the establishment of British rule in this country, a dichotomy between persons of Vedic tradition and persons with social conscience seems to have occurred. Before this period, even very orthodox persons earned the love and respect of the society through their acts of charity and service. There was a traditional division of labor and rules of living evolved depending on the labor one performed. People lived as distinct communities following their own prescribed traditions, without mingling with each other, wholly with the aim of universal prosperity. But there was no compromise on social responsibility and philanthropy continued to be practiced. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: