நல்ல அத்வைத திருஷ்டி வந்துவிட்டால் ஸ்வயம், பரம் என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, பல தினுஸில் கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஒருத்தன் தன்னுடைய இயற்கையான தர்மமாகவே ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். இப்போதும் ‘பர உபகாரம்’ என்ற Phrase தப்பாகி விடுகிறது! தனக்குப் பரமாகத்தான் இவனுக்கு எதுவுமில்லையே! ”என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது இந்த நிலையில்தான். ”நம் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
When one acquires the perspective of an Advaiti, then all distinction between the others and the Self disappears. He views everything as an embodiment of God, does blissful service to the needy people suffering in many ways becomes second nature to him. In such a case, the word Paropakaram becomes inappropriate. After all there is nothing “para” or alien to him. Immersed in this state of mind, Saint Appar declared that it was his bounden duty to serve this world. Our life’s aim should only be Service and nothing else. -Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural
Leave a Reply