Greatest Kainkaryam & Colossal Uthsavam!

Sankara Abishegam

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara,

Sri Periyava’s message on Sri Adi Sankara Jayanthi. This pretty much sums up the greatness of Hara and Sankara Nama as well as the greatness of Sri Adi Sankara Jayanthi!! Enjoy this picture of Sri Sankara performing abishekam to Sri Sankara! Thanks to our Sathsang seva member for the translation. Ram Ram.

ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் Week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன்.

அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாகவைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு.

வாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று ஜபித்துக் கொண்டிருங்கள் — நான், “அரோஹரா” என்று சொல்கிற வரை!

(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை “அரோஹரா” சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, “கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் “என்று தாம் கூறி, “கோவிந்தா கோவிந்தா” என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)

— இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.

 

I keep telling very often that you all should do Aacharya’s Uthsavam and this Sri Matam’s kainkaryam by kind and also in person. I have told, “In a year, do Sri Matam kainkaryam by taking at the least one week vacation; in a week, give 1 day in a week-end to Sri Matam”. Even better than that is, if you chant “Hara Hara Shankara Jaya Jaya Shankara” with utmost concentration for 5 minutes today, that would be a Grand Celebration and a Great Kainkaryam (Service) for Sri Matam. For your prosperity, for Sri Matam to keep you virtuous – for all, there is nothing else needed other than this Japam! It is better and bigger to do by heart rather than to do by kind or by doing kainkaryam.

Everyone keep chanting “Hara Hara Shankara Jaya Jaya Shankara” in your heart without chanting loud for 5 minutes – till I say “Arohara”!

(Saying so, He makes everyone chant in their heart for few minutes. Then, He says “Arohara” three times and makes everyone say so. Then, He says “Govinda Naama Sankeerthanam” and with the audience saying “Govinda Govinda”, He completes that day’s Upanyasam).

***This part comes as part of the Upanyasam happened during 1960 at Trichy on the Aacharya Jayanthi day.



Categories: Deivathin Kural

3 replies

  1. Ok ,done

  2. Will include this chanting too in my daily morning slokas.

  3. Hara Hara Shankara! Jaya Jaya Shankara!. Hara Hara Shankara! Jaya Jaya Shankara! Hara Hara Shankara! Jaya Jaya Shankara!
    Let Mahaperiyava bless this world for peace and for all us to live in peace and harmony with more and more love and affection towards each other.

Leave a Reply

%d bloggers like this: