Must Read – Sri Adi Sankara’s Divya Charitham by HH Sri Pudhu Periyava

Adi Shankara Chandramouleeswara Puja

Jaya Jaya Shankara Hara Hara Shankara,

Very happy to share the Divya Charitham of our Bhagawath Padhal very beautifully written by our Pudhu Periyava concluding with Thodakashtakam. HH gave this to Adiyen couple of years back and I have been doing parayanam of this on Sri Sankara Jayanthi day the last two years. It takes only 20 mins to do the parayanam, is very concise, lucid, and written in a way even a child can understand.  The entire divya charitham is pasted below both in English and Tamizh for devotees convenience. Thanks to our sathsang seva members Smt. Manasa Laitha who did the Tamizh typing from the book and Smt. Bharathi Shankar for the English translation.  Let’s share this great treasure with as many possible and indulge in Aacharya Bhakthi. The related links are provided below. Ram Ram

Original Version of the Adi Sankara Divya Charitham  by HH Pudhu Periyava in TamizhDownload
Typed of version of the Adi Sankara Divya Charitham  by HH Pudhu Periyava in Tamizh & EnglishDownload
Thodakashtalam Read and ListenEnglish, Tamizh, YouTube

                                                                           ஸ்ரீ ஆதி சங்கரரின் சரிதம்

                                                      ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுதியது

பரசுராமர் பிரதிஷ்டை செய்த க்ஷேத்திரம் கேரள தேசம். அந்த கேரள தேசத்தில் காலடி என்னும் க்ஷேத்திரத்தில் சிவகுரு ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு சிவாம்சமாக ஸ்ரீ ஆதி சங்கரர் அவதரித்தார். அவருக்கு ஐந்து வயதில் உபநயனம் ஆகியது. பிறகு தகப்பனார் இறந்து விடுகிறார். அப்போது ஆதி சங்கரர் தினமும் பிக்ஷை சென்று உணவு உண்பார். அதுபோல் ஒரு நாள் ஒரு வீட்டில் சென்று கேட்க, அந்த வீட்டு அம்மாள் கடுமையான வறுமையில் வாட பிக்ஷை அளிக்க ஒன்றுமேயில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை பிக்ஷை அளித்தார். அதை ஆதி சங்கரர் பிக்ஷையாக ஏற்றுக் கொண்டு கனகதாரா ஸ்லோகத்தை சொல்லி அவ்வீட்டில் கனகதாரையை பொழிய வைத்தார்.

ஒரு நாள் ஆதி சங்கரர் தனது தாயாரிடம் தான் சந்நியாசம் பெற்றுக் கொள்ளவா என்று கேட்க தாயார் கூடாது என்று மறுத்து விடுகிறார், பின்னர் ஒரு நாள் தாயாருக்காக நதியை பக்கத்தில் வரவைத்தார், அதில் ஒரு நாள் ஸ்நானம் செய்து கொண்டிருக்கும்போது முதலை ஒன்று காலை கவ்வி விடுகிறது, உடனே ஆதி சங்கரர் கரையில் உள்ள தாயாரிடம் தான் சந்நியாசம் பெற்று கொள்ளுகிறேன் என்று சொன்னால்தான் முதலை தன் காலை விடும் என்று சொல்ல தாயாரும் பையன் பிழைத்ததுக் கொண்டால் போதும் என்று ஏற்றுக் கொண்டார். உடனே முதலை காலை விட்டுவிட்டு மறைந்துவிட்டது.

தாயாரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு சந்நியாசம் பெற்றுக் கொள்வதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஒம்காரேஷ்வர் கோவிலுக்கு யாத்திரை செல்கிறார். சென்ற இடத்தில் ஒரே வெள்ளப் பிரவாகமாக உள்ளது. அவற்றை தனது கமண்டலத்தில் அடக்கி விட்டார்.

பின்னர் கோவிந்த பகவத்பாதரிடம் சந்நியாசம் பெற்றுக் கொண்டார். அவருடன் கொஞ்ச காலம் தங்கி அவருக்கு சேவை புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து காசிக்கு நடந்தே யாத்திரை சென்றார். காசியில் மிகப்பெரிய பண்டிதர்களையெல்லாம் வாதம் செய்து வெல்கிறார். பெரிய பெரிய பௌத்த மற்றும் ஜைன பண்டிதர்களையும் வென்றார்.

சங்கரர் காசி ஷேத்திரத்தில் இருந்தபோது சநந்தனர் என்னும் அந்தண குமாரருக்கு சந்நியாச தீக்ஷை கொடுத்தார். ஒரு நாள் கங்கையின் கரையில் ஆதி சங்கரர் இருந்தார். மறு கரையில் சநந்தனர் இருந்தார். சங்கரர் அவரை அழைக்க உடனே சநந்தனர் நதியின் மீதே நடந்து வர ஆரம்பித்து விட்டார். அவர் ஒவ்வொரு பாதத்தை வைக்க வைக்க பத்மம் மலர்ந்தது. பத்மத்தின் மீது பாதம் வைத்து கரைக்கு வந்து விட்டார். இதைக் கண்டு ஆதி சங்கரர் மிகவும் மகிழ்ச்சியுடன் பத்மபாதரே என்று அழைக்க அன்று முதல் அவர் பெயர் பத்மபாதர் என்றாகியது.

காசியில் ஒரு நாள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது ஈஸ்வரனே சண்டாள வேஷத்தில் வந்து ஆதி சங்கரரை வழிமறித்தார். பகவத்பாதாளுக்கும் ஈஸ்வரனுக்கும் விவாதம் நடக்கிறது. பின்னர் உண்மை அறிந்த ஆச்சார்யாள் ஈஸ்வரனை துதித்து மனிஷா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தை இயற்றுகிறார்.

இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே
நித்யேபரே நிர்மலே
சண்டாளோ ஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஷா மனிஷா மம ||

அத்தகு
நித்ய நிர்மல
பேருண்மை நானென்ற நம்பிக்கை
கொண்டோன் பஞ்சமனோ
பார்ப்பானோ ஒப்புகிறேன்
எந்தன்குரு…. (2)

உடனே ஈஸ்வரனும் சண்டாள வேஷத்திலிருந்து சிவபெருமானாக பார்வதியுடன் காட்சியளிக்கிறார்.

பின்னர் அங்கிருந்து மெல்ல மெல்ல பத்ரிநாத் செல்கிறார். அங்கே வேத வியாஸரை தரிசித்தார். அவர்தாம் வேதாந்தத்தின் சாரமான வார்த்தைகளை எல்லாம் எடுத்து எழுதியவர். அவற்றிற்க்கு பாஷ்யம் எழுதியது ஆதி சங்கரர். உடனே வேத வியாஸர் சந்தோஷப்பட்டு இன்னும் ஒரு பதினாறு வருடம் இரு என்று ஆசீர்வாதம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள விக்ரஹத்தை யாரோ சிலர் உஷ்ணகுண்டத்தில் போட்டுவிட்டார். இதை தனது யோக சக்தியின் மூலம் தெரிந்து கொண்டு அதை புனர் பிரதிஷ்டை செய்தார்.

பிறகு கேதார்நாத் சென்றார். அங்கிருந்து யோக சரீரம் எடுத்துக் கொண்டு கைலாஸம் செல்கிறார். ஸ்ரீ பரமேஸ்வரனை தரிசனம் செய்து சிவமஹிமை ஸ்லோகம் இயற்றுகிறார். பரமேசுவரனிடமிருந்து ஐந்து லிங்கங்களையும் செளந்தர்ய லஹரியையும் பெற்றார். வாயிலில் இருந்த நந்தி பகவான் ஆதி சங்கரரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு விட்டார். பின்னர் அதில் பாதியை மட்டும் தந்தார். அதை பெற்றுக் கொண்டு கேதார்நாத்துக்கு வந்தார். முக்தி லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தார். இதைத்தான் கேதார்நாத்தில் சித்தி அடைந்தார் என்பார்கள். அது தவறு. யோக நிலையில் கைலாசம் சென்று வந்துவிட்டாரே தவிர அங்கு சமாதியாகவில்லை.

பின்னர் கேதார்நாத்திலிருந்து கீழே இறங்கி பிராயாகை நோக்கி வந்தார். அங்கு ஒருவர் பெளத்த மதத்தை கண்டிப்பதற்காக, அதில் உள்ள அனைத்து தத்துவங்களையும் அதில் இருந்து கொண்டு எல்லாம் கற்று கொண்டு, பின்னர் அதைக் கண்டித்து விட்டு வேதங்களை அடிப்படையாக வைத்து மீமாம்சங்களை வளர்த்தவர். அவர்தான் குமாரிலபட்டர். அவரை ஆதி சங்கரர் வாதத்திற்கு அழைத்து அத்வைதத்தை ஸ்தாபிக்க சென்றார்.

குமாரிலபட்டரை பெளத்தர்கள் வாதத்திற்கு அழைத்து மலையிலிருந்து தள்ளிவிட்டனர். அதில் காலில் சிறியதாக அடிபட்டது. எதிர்சப்தம் செய்ததால் காலில் அடி பட்டுவிட்டது. பெளத்த குருமார்ககளை ஏமாற்றியதற்காக மனம் வருந்தி பிராயச்சித்தமாக உமியில் நெருப்பை வைத்து விட்டு அதில் இறங்கி உயிர் நீக்க போகிறேன் என்றார்.

பொதுவாக தற்கொலை செய்து கொள்வது தவறு. ஆனால் எந்த இடத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி உள்ளதோ, எங்கு சோமேஸ்வரர் சன்னதி உள்ளதோ அந்த இடத்தில் செய்து கொண்டால் முக்தி கிடைக்கும் என்று உள்ளது.

எனவே அவர் ஆசார்யாளிடம் மாகிஷ்மதி என்று ஒரு நகரம் இருக்கிறது. அங்கு சென்று மண்டனமிஸ்ரர் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து வாதம் செய் என்று சொல்கிறார்.

பகவத்பாதாள் காசி வழியாக மாகிஷ்மதி செல்கிறார். அங்கே செல்லும்போது அவருடைய இல்லத்தில் ஸ்ராத்த தினம். ஆகவே வாசலில் தங்கி விட்டு பிறகு ஸ்ராத்தம் முடிந்தவுடன் உள்ளே சென்று அவரை வாதத்திற்கு அழைத்தார். பிரம்மாவின் அவதாரம்தான் மண்டனமிஸ்ரர். அவருடைய மனைவி ஸரஸவாணி ஸரஸ்வதியின் அம்சம். குமாரிலபட்டர் முருகனின் அம்சம்.

ஆதி சங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் விவாதம் ஆரம்பமாகிறது. இருவரும் கழுத்தில் மாலை அணிகிறார்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்கள் தோற்று விட்டார்கள் என்று அர்த்தம். பதினைந்து நாட்கள் வாதம் நடந்தது. அனுஷ்டானம், பிக்ஷை நேரம் தவிர்த்து வாதம் நடந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அப்பொழுது ஸரஸவாணி போக சம்மந்தமான கேள்விகளை கேட்கிறார். ஆதி சங்கரருக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாததால் ஒரு நாள் நேரம் கேட்கிறார். அதன்படி அன்று அருகில் இருக்கும் ஒரு ஊரில் அரசன் இறந்துவிட அவனது உடலில் சென்று அனைத்தும் அறிந்து மீண்டும் அவனது சரீரத்திலிருந்து வெளியேறி ஸரஸவாணியிடம் பதில் அளிக்கிறார். ஆதி சங்கரர் ஜெயித்து விடுகிறார். பின்னர் மண்டனமிஸ்ரருக்கு சந்நியாசம் கொடுத்து, ஸுரேஷ்வராசார்யர் என்று பட்டம் கொடுக்கிறார். மண்டனமிஸ்ரர் ஸரஸவாணியை அழைத்து தங்களுடனே வருமாறு அழைக்கிறார். அதற்கு ஸரஸவாணி நான் தங்கள் பின்னாலே வருவேன். நீங்கள் என்னை திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் அந்த இடத்திலேயே நான் நின்றுவிடுவேன் என்று சொல்கிறார். அதன்படி மூவரும் கிளம்பிச் செல்ல துங்கபத்ரா நதிக்கரையின் பக்கம் கொலுசு சத்தம் கேட்காமல் நின்றுவிட ஆதி சங்கரர் திரும்பிப் பார்க்கிறார். உடனே அங்கேயே ஸரஸவாணி நின்று விடுகிறார். அந்த இடம் இன்றும் அப்படியே இருக்கிறது. அங்கே சாரதா தேவி இன்றும் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.

பின்னர் ஹம்ஸதாமலகர் என்றொருவர் இருந்தார். அவருக்கு சிறு வயது முதலே பேச்சு வரவில்லை என்று அவரை அழைத்துக் கொண்டு ஆதி சங்கரரிடம் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு சங்கரர் அவரைப் பார்த்து நீ யார் என்று கேட்க அதுவரை பேசாமல் ஊமையாக இருந்தவர் தொடர்ந்து வேதாந்தம் மொத்தத்தையும் சொல்லி விடுகிறார். பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷமடைந்து அவரை ஆசார்யாளுடனே அனுப்பி விடுகிறார்கள்.

சிஷ்யன் எழுதிய அத்வைத நூலிற்க்கு ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதினார். தினந்தோறும் ஸ்நானம் செய்த பின்னர் அனைவரும் ஆதி சங்கரரிடம் பாஷ்யம் பாடம் கேட்பார்கள். ஒரு நாள் ஒரு பையன் வர தாமதமாகியது. அப்போது சங்கரர் நீங்கள் பாடத்தை தொடருங்கள், அவன் வர தாமதமாகும் என்றார். அதற்குள்ளாக அந்த பையன் தோடக விருத்தத்தில் தோடகாஷ்டகம் செய்துக் கொண்டு வந்தான்.

சில நாட்கள் கழித்து ஆதி சங்கரரின் தாயார் இறந்து விட்டார். இது கேட்டு ஆதி சங்கரர் காலடி செல்கிறார். அங்கு வீட்டின் பின்னால் சமாதி கட்டி விடுகிறார். இன்றும் அந்த சமாதியை காணலாம். இதை அனைத்து நம்பூதிரிகளும் ஆட்சேபித்தார்கள். இதனால் ஆதி சங்கரர் அங்கு இனிமேல் நம்பூதிரிகள் யாரும் இருக்கக்கூடாது என்று சொல்லி விட்டார். தலை கால் தூங்கி வந்த நம்பூதிரிகள் மட்டும் தலைகட்டு நம்பூதிரி கால்கட்டு நம்பூதிரி என்று இரு குடும்பத்தினர் மட்டுமே இன்று வரை அங்கு உள்ளனர். அந்த இரு குடும்பங்களும் இன்று வரை கிருஷ்ணன் கோயில் பூஜை செய்து வருகின்றனர். இன்று போனாலும் அதைப் பார்க்கலாம்.

பிறகு அங்கிருந்து பல க்ஷேத்திரங்கள் சென்று ஸ்ரீசைலம் வந்தடைந்தார். ஸ்ரீசைலத்தில்தான் சிவானந்த லஹரி இயற்றுகிறார். அந்த க்ஷேத்திரத்தில் ஒரு காபாலிகன், ஒரு அரசனோ அல்லது சந்நியாசியையோ கொன்றால்தான் தனது காரியம் சித்தியாகும் என்று சொல்லி ஆதி சங்கரரை வெட்ட வருகிறான். அப்போது பத்மபாதர் மீது நரசிம்மர் வந்து காபாலிகனை வீரட்டுகிறார். மீண்டும் அங்கிருந்து பல க்ஷேத்திரங்கள் செல்கிறார். திருப்பதியில் ஜனாகர்ஷனம் தனாகர்ஷனம் ஆகிய இரண்டிற்காகவும் இரண்டு யந்திர பிரதிஷ்டை செய்கிறார். இதன் நினைவாக அங்கு சுப்ரபாத மண்டபத்தில் ஒரு கல்லின் மேல் சிலை ஒன்று இருக்கும். புஷ் கரினி கரையில் ஆதி சங்கரரின் விமானம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேங்கட சுப்ரமணியம் என்று சில பேருக்கு பெயர் இருக்கிறது. அப்படிப்பட்ட உற்சவ விக்ரஹத்தையும் ஆதி சங்கரர் விமானத்தில் வைத்திருக்கிறார்கள்.

பின்னர் சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் வந்தார். ராமர் பிறந்த அயோத்தி, கிருஷ்ணர் பிறந்த மதுரா, கங்கை உற்பத்தியாகும் ஹரித்வார், காசி, காஞ்சி, அவந்திகா [உஜ்ஜயினி] ஒம்காரேஷ்வர், கிருஷ்ணர் ராஜ்யபாலனம் செய்த துவாரகா என்று ஏழு மோக்ஷபுரியாகும். அதில் ஒன்றான காஞ்சிக்கு ஆதி சங்கரர் வந்தார். இதில் ஐந்தாவது வருவது காஞ்சியாகும். இங்குதான் காமாக்ஷி அம்பாள்                             பிலாகாசமாகவும், ரூபமாகவும் அருளாசி செய்துக் கொண்டிருக்கிறார். ஆதி சங்கரர் இங்கு வரும் போது அம்பாள் உக்ர ரூபிணியாக இருந்தாள். எனவே பகவத்பாதாள் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து சாந்தரூபிணியாக ஆக்குகிறார்.

பிறகு ஆதி சங்கரர் பலபேர்களைச் சந்தித்து காஞ்சியில் ஸர்வக்ஞ பீடம் ஏறுகிறார். இப்போது கோவில் உற்சவ மூர்த்தி இருக்கும் இடத்தின் எதிரில் உள்ள மண்டபத்து பக்கத்தில் துண்டீர மஹாராஜா இருக்கும் இடத்தில் ஸர்வக்ஞபீடம் ஏறுகிறார். அப்போது திருநெல்வேலி மாவட்டம்  பிரம்மதேசத்தில் உபநயனம் ஆன சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பல கேள்விகளை சங்கரரிடம் கேட்க அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். பின்னர் அச்சிறுவன் தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறான். சங்கரர் அச்சிறுவனது பாண்டித்யத்தைப் பார்த்து அவருக்கு சந்நியாசம் தந்து ஸ்ரீ ஸர்வக்ஞேந்த்ர ஸரஸ்வதி பட்டம் கொடுத்து காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரிக்க செய்கிறார். முதல் சிஷ்யர் பத்மபாதர். கடைசியாக வந்தது ஸர்வக்ஞேந்த்ரர். பிறகு சுரேஷ்வராச்சாரியாரிடம் மற்ற லௌகீக விஷயங்களை பார்த்துக் கொள்ள சொல்கிறார்.

ஸ்ரீ காமாக்ஷி கோவிலிலேயே பிரகாரம் சுற்றி வரும் வழியில் ஜீவன் முக்தராக ஆகி இன்று வரை ஆசீர்வதித்து வருகிறார். சிவபெருமானிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த ஐந்து லிங்கத்தில், முக்திலிங்கத்தை கேதார்நாத்திலும், மோக்ஷலிங்கத்தை நேபாளத்திலும், போகலிங்கத்தை கூடலியிலும், வரலிங்கத்தை சிதம்பரத்திலும் பிரதிஷ்டை செய்கிறார். யோக லிங்கத்தை தானே வைத்துக் கொள்கிறார். ஆதி சங்கரர் காஞ்சி .காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதி. இன்று வரை அது தொடர்ந்து 70- வது பீடாதிபதி வரை தொடர்ந்து பூஜை நடைப்பெற்று வருகிறது.

***************

தோடகாஷ்டகம்
 

விதிதாகில ஸாஸ்த்ர ஸுதாஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

கருணா வருணாலய பாலய மாம்
பவ ஸாகரது: க்க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்ஸந தத்வ விதம்
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

பவதாஜநதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாரு மதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

பல ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹமஹா ஜலதிம்
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்ஸந லாலஸதா |
அதிதீந மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

ஜகதீம் அவிதும் கலிதாக் ருதயோ
விசரந்தி மஹாமஹஸச் ச்சலத: |
அஹிமாம்ஸுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

குரு புங்கவ புங்கவ கேதன தே
ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதீ:||
ஸரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

விதிதா ந மயா விஸதைக கலா
ந ச கிஞ்சந காஞ்நமஸ்தி குரோ: |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேஸிக மே சரணம் ||

***************************************************************************************************************

                                                                               Biography of Sri Adi Sankara

                                                                   By HH Sri Jayendra Saraswathi Swamigal.

The state of Kerala was created by Lord Parasurama.  Sri Adi Shankara took his Avatar in that Holy land of Kerala in a place called Kaaladi and was born to Sivaguru and Aryambal as an Amsam of Lord Siva (with the divine qualities of Lord Shiva). Sri Sankara’s upanayanam was performed  at the age of five. Then His father passed away. Adi Shankara, at that time used to go for Biksha and earn His living by receiving alms (beg for food). Likewise one day when He went to a house for seeking Biksha, the lady of the house being too poor to give Shankara anything, gave Him the only Gooseberry (Amla) fruit that was available at home as Biksha.  Shankara accepted the gooseberry fruit and sang Kanakadhara Sthothram and brought about a rain of golden gooseberries thus eliminating the poverty at her home.

One day when Shankara asked His mother if He could attain Sannyasa, she categorically refused to give permission for it. Then one day He turned the course of the river towards their house for the sake of His mother. One day when he was bathing in the river, a crocodile caught hold of His feet. At once Adi Shankara told His mother who was standing on the river bank that the crocodile would let go of His leg only if He promised to attain Sannyasa. His mother in her urge to save her son from the crocodile gave her consent. Immediately the crocodile let go of His feet and disappeared into the water.

Shankara after getting His mother’s blessings went to Omkaareshwar (Ujjain) temple in Madhya Pradesh to attain Sanyasa. The whole place was flooded and engulfed in water. Shankara encompassed the entire water into His Kamandala.

Then He got Sannyasa from Govinda Bhagavath Pada. He stayed with his Guru, serving him for some time. From there He undertook a pilgrimage to Kasi walking all the way by foot. He involved Himself in many debates winning over great pundits. He also won a lot of Buddhist and Jain exponents.

While staying in Kasi, Shankara gave Sannyasa Deeksha to a Brahmin boy called Sanandana. One day Adi Shankara was sitting on the banks of the river Ganges and Sanandana was standing on the other side of the river. When Shankara called him, Sanandhana started walking on the river to reach his guru. A lotus flower bloomed under his foot for his every step on the water. He placed his feet on the Padmam (lotus) and reached the banks where Sankara was sitting. Shankara was extremely happy to see this and called his disciple “Padma Padharey” meaning, “the lotus footed one.”

Once in Kasi, when Shankara was going to the temple to have a darshan of Lord Viswanatha, Lord Eshwara Himself, in the guise of a Sandala, (man from a poor caste) confronted Him on the way. An argument between the Lord and Shankara ensued. Then realizing the truth Shankara worshipped Eswara and sang a sloka called ‘Manisha Panchakam’.

“Indham yasya dhrida madhi: sukare
Nithye pare nirmale
Sandalo sthu sa thu dhwijosthu
Gururithyesha manisha mama||

Athagu
Nithya Nirmala
Perunmai naanenra nambikkai
Kondon  panjamano
Parpano oppugiren endhan guru…2

(“The man who has such a faith that he is none other than the great and chaste everlasting truth, be him a Brahmin or a man of low caste, becomes one and I bow to such a man as my Guru.”)

At once Lord Eswara came out of the guise of a Sandala and regained His original form with Parvathi and gave Darshan to Shankara.

From Kasi, He moved towards Badrinath at a slow pace. There He had the Divine Darshan of Sage Veda Vyasa. Veda Vyasa is the person who imbibed the words containing the essence of Vedanta and used them in his works. The person who wrote Bashyam (treatises) on his works is Adi Shankara. Pleased by this, Veda Vyasa blessed Shankara to live for sixteen more years.

Shankara then went to Badrinath Temple.  The main deity was thrown by somebody into a hot furnace. He found this through His Yogic powers and reinstated the deity.

Then He went to Kedarnath. From there He went to Kailash acquiring a Yoga Sareera (Yogic body.) There He had the Darshan of Lord Parameswara and composed Siva Mahimai Sloka; got five Shiva Lingams and Soundarya Lahari from Him. Nandhi Deva, who was keeping watch at the entrance of Kailash, got hold of the Soundarya Lahari. Then Nandhi returned half of it. Shankara after getting it, came back to Kedarnath. Then he established Mukthinath deity there. This has been interpreted by many as the attainment of Mukthi by Shankara Himself. It is not so. He went to Kailash and came back to Kedarnath through His Yogic powers but did not attain Mukthi there.

Then He got down from Kedarnath and came towards Prayag. There was a person there, who joined Buddhism to learn all its philosophies in order to disprove them, and after having done so, spread Meemaamsai, a religion, based on the Vedas. He is Kumarila Bhatta. Shankara invited him for debate to establish Adwaita.

Buddhists called Kumarila Bhatta for a debate and pushed him from a mountain. During the fall he got a small wound on his leg. He got hurt because he made a counter sound. He felt bad for having betrayed his Buddhist gurus and to repent for his action, he was planning to give up his life by sitting inside the fire-lit husk.

Normally it is considered to be wrong to take out one’s own life. But one is allowed to attain Mukthi willingly, in a place where Ganga, Yamuna, and Saraswathi flow through, and where there is the Sannidhi of Lord Someswara. He told Acharya about a city called Magishmathi, where a man called Mandanamishrar was residing, and asked Him to invite him for a debate.

Bhagawadpadha went to Magishmathi via Kasi. When He went there it was a Sraddham (ceremony) day at Mandanamishrar’s house. So he stayed outside and went in after the Sraddham got over and called him for a debate. Mandanamishra is the Avatar of Lord Brahma. His wife Sarasawani is Goddess Saraswathi’s incarnation. Kumarila Bhatta is the incarnation of Lord Muruga.

A debate began between Adi Shankara and Mandanamishra. Both of them adorned themselves with a garland. The person whose garland dried first was considered to be the loser in the debate. The debate went on for fifteen days. It went on throughout the day except during the Puja time and while they had their food. At that time Sarasawani asked a few questions related to materialistic pleasures. Being a Sannyasi, Shankara lacked knowledge in those areas and sought a day’s time to reply. Then He went into the body of a king who had died that day and after learning the things he wanted, came back to His own body and replied her questions. Shankara won the debate. Then He gave Sannyasa to Mandanamishra and blessed him with the title Sureshvaracharyar. Mandanamishra called Sarasawani and requested her to come along with them. Sarasawani said, “I will follow you. But you should not turn back to see me. If you do so, I will stay then and there.” They consented to her condition and the three started their journey. While coming near the river Thungabathra, the sound from Sarasawani’s anklets had stopped. Shankara turned back to check and Sarasawani stopped there. The place is there still now. Goddess Saradha Devi is standing there even today.

Then there was a person called Hasthamalakar. People around him informed Shankara that he was unable to speak right from his childhood. Shankara asked him his name and the man who was dumb all along, explained the whole Vedanta. Pleased by this, his parents sent him along with Shankara.

Shankara wrote a treatise (Bahsyam) on His disciple’s work on Adwaitha. Every day after taking bath all the disciples would listen to Shankara’s discourses on various topics. One day a boy was late to the session. “ You all carry on with your lessons. The boy will take some time to come”, said Shankara. Meanwhile the boy turned up composing Thotakashtakam in Thotaka meter.

After some time Adi Shankara’s mother passed away. On hearing the news Shankara went to Kaladi. He built a Samadhi for his mother at the back yard. The Samadhi can be seen even today. All the Namboodhris in the town objected to this. So Adi Shankara declared that Namboodhri families should not reside there. Only the two Namboodris, who carried the head and the feet, stayed there as Thalaikattu Namboodhri and Kaalkattu Namboodhri. Those are the only two families Namboodhri living there to this day. Those two families are still performing pujas in the Krishnan temple there. One can see them even today if one goes there.

From there Shankara came to Srisailam after visiting many pilgrimages on the way. He composed Sivananada Lahari slokam only at Srisailam. In that Kshetram there was a Kaapaalika with the belief that his desire would be fulfilled only if a king or a Sanyasi was killed and offered as sacrifice. He asks Adi Sankara to give his life for that purpose. At that time Lord Narasimha descended on Padmapadha (his Sishya) and drove away the Kaapaalika. Then He visited a lot of Kshetrams. In Thiruppathi, He performed the Pradhishtai of two Yantras for Janaakarshanam (to attract and make the people throng the temple) and Dhanaakarshanam (to bestow wealth). In memory of this there is a statue on a stone in the Suprabatha Mandapa. Adi Shankara’s Vimana was consecrated on the banks of Pushkarani pond. The name Venkata Subramanian is common these days. There is an Urchava murthy by that name in Adi Shankar’s Vimana.

Then Shankara had the Darshan of Lord Nataraja at Chidambaram. From there He came to Kanchipuram. Sri Rama’s birth place Ayodhya, Krishna’s birth place Madhura, Ganga’s origin Haridhwar, Kasi, Kanchi, Avantika (Ujjain), Omkareshwar, and Sri Krishna’s kingdom Dwaraka are the seven places of Moksha, Seven Mokshapuris. Shankara came to Kanchi which is one among them. Kanchi is in the fifth place among these seven. It is here that Goddess Kamakshi is showering Her blessings in her Rupam (form) and as Pilakasam. The Ambal had an Ugra roopam (with an angry look), at the time of Shankara’s visit. So Bagavadhpaadhal performed a Chakra Pradhishtai and turned Kamakshi into a Santharoopini (with a sedate look).

Then Shankara went about meeting many people and ascended the throne of Sarvagnya Peetam. He ascended Sarvagnya Peetam at the place where there is Thundira Maharaja’s statue is standing now, which in next to the Mantapa opposite Urchava Murthy. At that time, a small boy from Brahma Desam in Thirunelveli district, who had his Upanayanam done, approached Shankara. He put forth many questions and debated with Shankara. Shankara answered all his questions. Then the boy accepted his defeat. Shankara being impressed by the boy’s knowledge and ability gave Sanyasa to him and also a title called Sarvagnyendra Saraswathi and made him adorn the Kanchi Kamakoti Peetam. The first Sishya was Padmapaadhar. The last one who came to Him was Sarvagnyendrar. Then Shankara assigned Sureshvaracharyar to look after the worldly duties of the Sri Matam.

On the way of Prahara of Kamakshi temple Shankara became a Jeevan Mukthar and is still blessing us all in the Kamakshi temple. Out of the five Sivalingas that He got from Lord Siva, He established (pradhishtai) of Mukthi Linga at Kedarnath, Moksha Linga at Nepal, Boga Linga at Koodali, and Vara Linga at Chidhambaram. He kept Yoga Linga for Himself. Adi Shanakara is the first Peetathipathy of Sri Kanchi Kamakoti Peetam. The lineage has been continuing till now to the Seventieth (70th) Peetathipathy and pujas are being performed continuously to this day.

                                                                                  THOTAKASHTAKAM.

Vidhithaakila saasthra sudhaajalathe

Mahithobanishath gadhithaartha nidhe |

Hrudhaye kalaye vimalam charanam

Bhava shankara desika me charanam||

Karuna varuna laya paalayamaam

Bhava saagaradhu:kkavidhoonahrudham|

Rasayaakila dharsana ththava vidham

Bhava shankara desika me charanam||

Bhavathaajanathaa suhithaa bavithaa

Nijabodha vicharana charumathe|

Kalayeshvara jeeva vivega vidham

Bhava shankara desika me charanam||

Bhava aeva bhavaanidhi me nidharaam

Samajaayadha chedhasi kouthugitha|

Mama vaarayamohamaha jalathim

Bhava shankara desika me charanam||

Sukhruthe:dhikhruthe bhahuthaa bhavatho

Bhavithaa hamadharshana lalasatha|

Athidheena mimam paripaalayamaam

Bhava shankara desika me charanam||

Jagatheem avithum kalithak ruthayo

Visharanthimahaamahasach chchalatha:|

Ahimaamkarivathra vibhasi guro

Bhava shankara desika me charanam||

Guru pungava pungava kedhana the

Samathaamayathaam nahi go:pi sudhee:|

Charanaagatha vathsala thathvanidhe

Bhava shankara desika me charanam||

Vidhithaa na mayaa vishadhaika kalaa

Na cha kinjana kaanjanamasthi guro:|

Dhruthameva vidhehi krupaam sahajaam

Bhava shankara desika me charanam||



Categories: Devotee Experiences

8 replies

  1. காச்மீர தேசத்து காஷ்மீர பண்டிதர்கள் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர்கள். அங்கு சர்வஞ்ய பீடம் என்ற பீடத்தின் 4 வாயில்களிலும் 3 பக்கங்களிலிருந்தும் வந்த பண்டிதர்களால் 3 பக்கங்கள் திறக்கப்பட்டது. தென் தேசத்திலிருந்து ஸ்ரீ பகவத் பாதாள் சென்று சர்வஞ்ய பீடம் ஏறி பண்டிதர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதில் அளித்து ‘சர்வஞ்யத்வம்’ பெற்றார்கள். அத்தகைய தேசத்தில் காச்மீர பண்டிதர்கள் துரத்தி அடிக்கப்பட்டு அகதிகள் போல் வாழ்வது வருந்தத்தக்கது. அவர்களுக்கு தகுந்த அந்தஸ்து கிடைக்க எல்லாம் வல்ல ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர சுவாமியை வேண்டிக்கொள்வோம் .

  2. ஸ்ரீஆதிசங்கர்

    காலடியில் பிறந்து, ஐந்து வயதில் உபநயனம் கண்டு, எட்டு வயதில் துறவறம் ஏற்று தன் முப்பத்திரண்டு வயதிற்குள் பாரததேசம் முழுவதும் மூன்று முறை வலம்வந்து, பாரத தேசத்தின் நான்கு திக்குகளிலும் முறையே சிருங்கேரி, பத்ரி, துவாரகா, புரி (இரண்டு மலைப் பகுதி, இரண்டு கடற்பகுதி) போன்ற இடங்களின் தன் சீடர்களை முதற்குருவாக இருக்கச் செய்து, தென்திசையான சிருங்கேரியில் பன்னிரெண்டு வருடங்கள் தானே தங்கி குருவாக வழிகாட்டி, தன் சீடரான சுரேஸ்வரரை அந்த ஸ்ரீ சாரதா பீடத்தின் குருவாக நியமித்து சனாதன தர்மத்தை நிலைநாட்டச் செய்த மகான் ஸ்ரீ ஆதிசங்கரர். தன் தாயாரின் இறுதி காலத்தை ஞான திருஷ்டியில் அறிந்து சிருங்கேரியில் இருந்து காலடிக்குச் சென்று தாயாரின் இறுதி காலத்தில் உடன் இருந்து கடமைகளைச் செய்தவர். “ஏகச்லோகி முதல் பிரும்மசூத்ர பாஷ்யம்” வரை எழுதி, பாமரன் முதல் பண்டிதன் வரை ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய யோகியவர். பாரதத்தின் முக்கிய ஷேத்திரங்கள் அனைத்திற்கும் விஜயம் செய்தவர். திருச்செந்தூர், ராமேஸ்வரம், காஞ்சீபுரம், காசி, காஷ்மீரம் என்று இறைவனை தரிசித்து வந்தவர். விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கும் பாஷ்யம் எழுதியவர். காஷ்மீரத்தில் “சர்வக்யபீடம்” ஏறியவர். தன் இறுதி நாளில் கேதார்நாத் பனிமலையில் இறைவனோடு இரண்டறக் கலந்தார் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர். அவரது படைப்புகளைப் படித்துப் புரிந்துகொள்ளேவே நமக்கு அறிவும், ஆயுளும் போதாது. அந்த மகானுக்கு நமஸ்காரம் செய்கிற தகுதியைக்கூட நாம் இன்னும் பெறவில்லை. ஸ்ரீசங்கரரின் பிறந்த இடமான காலடியைக் கண்டு அங்கு அவருக்கும், ஸ்ரீசாரதாம்பாளுக்கும் கோவில் எழுப்பிய மகான் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ ஸ்ரீ நரசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் ஆவார். இவர் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்திமூன்றாவது பீடாதிபதியாவார். இவரது பெருமுயர்ச்சியால்தான், சுமார் நூற்றிப்பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஸ்ரீ சங்கரஜெயந்தி உற்சவம் ஐந்து தினங்கள் கொண்டாடப் பட்டது. இதுதான் வரலாறு. ஸ்ரீஆதிசங்கரருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனே, அவர் விளக்கிய அத்வைத சித்தாந்தத்தை மனதில் கொள்ள முயற்சிக்கவும், எல்லோரிடமும் தயையுடன் இருக்கவும், எப்பொழுதும் சத்தியத்தைச் சொல்லவும், எளிமையாக வாழ்வதும் தானே. உண்மையைச் சொல்லுவோம். எளிமையாக வாழுவோம். ஸ்ரீஆதிசங்கர் திருவடிகளே சரணம். (ஸ்ரீ சங்கரஜயந்தி தினம் 11.05.2016)

    • ஸர்வக்ஞ பீடம் ஏறுவது காஞ்சி ஷேத்திரத்திலா அல்லது காஷ்மீரிலா???

  3. Thanks for the sloka apt for sankara jaya this.

  4. Thanks for the special one during Sri Sankara Jayanthi. But not able to download the pdf of both tamil and english versions. Only copy paste works.

  5. A precious e gift diring Sankarara Jayanthi Week.
    Pranams to Periyava.
    R Balasubramanian, Chennai 59..

Trackbacks

  1. Important – Key 13 Point Upadesams on Sri Adi Sankara Jayanthi & Beyond…. – Sage of Kanchi

Leave a Reply to Ramakrishnan VenkateswaranCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading