Periyava Golden Quotes-207

album2_97

சாஸ்திரங்கள் நம்மையெல்லாம், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ” என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கர்மம் செய்ய வேண்டும் என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Sastras have kept us bound, by asking us to adhere to a set of rules and regulations. It is for our benefit as well as the world’s, says Lord Krishna, that we must live according to the tenets of the sastras: “Tasmaath Saasthram Pramaanam Te Karyaa Kaarya Vyvasthi Thau” (the Sastras are the authority as to what you must do and must not). He tells one should not do karmas based on his whims and fancies but should do Karmas as specified in the Sastras. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: