Jaya Jaya Shankara Hara Hara Shankara,
In Vol 7, Sri Periyava says Adwaitham as ‘Sathya Tharam’ (highest of all truths) and Adwaitham accepts all other philosophies. The Adwaitha philosophy and the Shan Matha Sthapana reinforced by Sri Bhagawathpadhal is the only one that is aligned in wholesome with the Veda Dharma. Sri Periyava explains this beautifully below. Thanks to Shri ST Ravikumar, our sathsang seva volunteer for the translation. Ram Ram
அனைத்தும் அடங்கிய வைதிகம் ஆசார்யாள் மதமே!
வேதத்தை ஒப்புக்கொள்வதாகச் சொன்னாலும், அப்படிச் சொல்லாவிட்டாலும் அன்றைக்கு இருந்த மதங்கள், அப்புறம் ராமாநுஜர், மத்வர் போன்றவர்கள் ஸ்தாபித்த மதங்கள், இன்றைக்கும் லோகம் பூராவிலும் இருக்கிற அந்நிய மதங்கள் ஆகிய எல்லாவற்றிலுமே நல்லதாக என்னென்ன அம்சம் இருக்கிறதோ அதெல்லாம் வேதத்தில் இருப்பதுதான். கால தேச வர்த்தமானங்களால் வெளி ஆசார அநுஷ்டானங்கள் வைதிகமாகத் தெரியாது போனாலும், தேசாந்தரங்களில் உள்ள மதங்கள் உட்பட எதுவானாலும் ‘ஸ்பிரிட்’டை எடுத்துக்கொண்டால் அது வேதத்தில் ஆதாரமுள்ளதாகவே இருக்கும். இங்கே ‘ஸ்பிரிட்’ என்று சொல்லும்போது நான் மதங்களிலுள்ள தத்வங்களை மட்டும் சொல்லவில்லை. சடங்குகளையும்தான் சொல்கிறேன். இன்றைக்கு அந்நிய மதங்களில் உள்ள சடங்குகள் வைதிக வாஸனையே இல்லாத மாதிரி இருக்கிற போதும்கூட அந்தச் சடங்குகளின் ஜீவனாக இருக்கப்பட்ட, ‘ஸ்பிரிட்’ என்று சொன்ன, அம்சம் வேதத்தில் இல்லாமலிருக்காது. வைதிகம், அவைதிகம் என்று சொல்லப்படும் எல்லா மதங்களுமே தெரிந்தும் தெரியாமலும் இப்படி தத்வம், சடங்கு இரண்டிலும் ஓரொரு அம்சங்களை வேதத்திலிருந்து எடுத்துக்கொண்டுதான் உருவாயிருக்கின்றன. ஓரொரு அம்சங்களைத்தான்; பூர்ணமாக இல்லை.
வேதத்தைப் பார்த்தால் அதில் சிவ ஸம்பந்தமாகவும் பல உண்டு விஷ்ணு ஸம்பந்தமாகவும் பல உண்டு. விசிஷ்டாத்வைதம், த்வைத மதம் முதலியவற்றில் சிவ ஸம்பந்தமானவற்றை விட்டுவிட்டு வைஷ்ணவமானதை மட்டுந்தான் எடுத்துக்கொண்டிருக்கிறது. சிவாத்வைதம், சைவ ஸித்தாந்தம் முதலியவற்றில் இதற்கு vice versa-வாக இருக்கும். ஆகக்கூடி வேதத்தில் இருப்பதில் ஏதோ ஒன்றை விட்டு, ஒன்றை மட்டும் க்ரஹித்துக் கொள்வதாகவே இருக்கும்.
மீமாம்ஸகர்கள் கர்ம மார்க்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஞானத்தைத் தள்ளினார்கள். பௌத்தம் யம நியம ஒழுக்கங்கள், நிஷ்ப்ரபஞ்ச தத்வம் இவற்றை மட்டும் வேத தர்மத்திலிருந்து எடுத்துக்கொண்டு, ஆனால் வேறே தினுஸாக ‘டெவலப்’ செய்துகொண்டு போயிற்று. இப்படி எந்த மதத்தைப் பார்த்தாலும் வேதத்தில் சிலதைக் கொள்ளுவது, சிலதைத் தள்ளுவது என்றே இருக்கிறது. ஸம்பூர்த்தியாக வேதம் முழுவதையும் அப்படியே எடுத்துக் கொண்டது ஆசார்யாளின் மதம்தான்.
ஸரியாய்ச் சொன்னால், அது ஆசார்யாள் மதமே இல்லை. ஒரிஜனல் வேத மதமேதான்! ஆசார்யாள் புனருத்தாரணம் பண்ணிய ஒரிஜனல் வேத மதம்! கர்மம், பக்தி, ஞானம், யோகம், தர்மம் என்ற ஒழுக்க நியமம், ஸப்ரபஞ்சம், நிஷ்ப்ரபஞ்சம், சிவன் – விஷ்ணு என்கிற மாதிரி பேதமில்லாமல் அத்தனை தெய்வங்களும் ஸம்மதமென்பது-என்று பூர்ணமாயிருப்பது ஆசார்யாள் கொடுத்துள்ள வழி ஒன்றுதான்.
Aacharya’s Religion is the only philosophy, encompasses everything.
All the good aspects in all the religions, be it the ones which acknowledge the Vedas or otherwise, the ones which were existing that time, the ones established by Sri Ramanuja, Madhvacharya etc., and the ones which are existing today all over the world, are all there in the vedas. Although the customs and practices followed may appear to be not adhering to vedic traditions due to differences in terms of place and time, if you consider the underlying spirit in all the religions spread in different countries, it is based on Vedas only.
As regards the spirit, I am not referring to only the philosophies of the religions but also the rituals. Even though it may appear today that there is no connection to Vedic culture in the rituals observed in the other religions, the spirit referred to as the heart behind such rituals cannot be said to be not existing in the vedas. All the religions, Vaidhic (Vedas-based) or Non-Vaidhic, have, knowingly or unknowingly, absorbed some of the good aspects from the vedas in their philosophies and rituals. Only a few aspects, but not adopted entirely. In the vedas, there are several aspects related to Shiva and several others, to Vishnu. Visishtadvaitham and Dwaitham philosophies have excluded the aspects related to Shiva and retained only those relating to Vishnu. It will be vice versa in the case of Shivadvaitham, Saiva Sidhantham etc. All in all, they have adopted some of the aspects from the vedas and excluded some. The followers of Meemamsam, adopted aspects pertaining to the path of ‘Karma’, leaving out ‘Gnyana’ (Spiritual knowledge) related aspects. Budhism has evolved in a different fashion, adopting only the ‘Yama’, ‘Niyama’ (rules and observences) and ‘Nishprapanja’ – the irreligious aspects from the vedas. When you look at any religion, it can be observed that they have adopted some aspects from the Vedas and excluded some others.
It is only Acharya’s philosophy that has absorbed the Vedas in its entirety. To say more exactly, it is not even Acharya’s philosophy but it is the original Vedic religion itself. It is the re-established original Vedic order, by our Acharya. It is only the path prescribed by our Acharya which is complete without any discrimination between Karma (action), Bhakthi (devotion), Nyanam (Spiritual knowledge), Yogam (Duty/Methods), Dharma otherwise known called Righteous conduct, Sapprapanjam, (religious) Nishprapanjam, (irreligious) Shiva, Vishnu, etc. and accepting all the deities as equals.
Categories: Deivathin Kural
Maha Periyava Speaks about our Adi AcharyaL. Great to listen, contemplate and meditate about these two Mahaans on the occasion of Sri Sankara Jayanthi!Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Thanks for the share with translation.
I have one question regarding the translation. Cannot understand: ” ….evolved in a different fashion, adopting only the ‘Yama’, ‘Niyama’ (rules and observences) and ‘Nishprapanja’ – the irreligious aspects from the vedas….”
Not looking for a debate, just clarification for my own understanding.
When you say Nishprapanja is it the same as Nishprapancha –
If it is Nishprapancha, not being a scholar in Sanskrit, I have always thought that Nishprapancha meant “without world” & Sapprapancham “with world”. In this context Nishprapancha would mean philosophy which dismisses the appearance of the world as Maya. The Advaitic view. The other view Sapprapancham accepts the world as a distinct (separate reality). Don’t I know if I have put it clearly.
(From the above it follows that Nishprapancha cannot be “irreligious” as this doctrine is accepted by the Vedas)
Anyway, it is just for my own clarity that I asked the above. Forgive me if it looks argumentative. It is not meant to be.
Thanks, as always, for the great work that is being done by this site
Edit:
Sorry for the typo
“Don’t I know if I have put it clearly” should actually be “Don’t know if I have put it clearly”
Ram Ram Sir – The person who did this translation Shri Ravikumar is on a yatra and will come back after a week. I will follow-up with him for his feedback. Ram Ram
Ram Ram Sri Sai Srinivasan. Thank you for the prompt response. It is not that important. I must learn to take the essence & discard what is not important. Ram Ram
Beautiful photo. Excellent.