ஆசையும், துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு ஜட்ஜ் குற்றவாளியைச் சிக்ஷிக்கிறபோது அவருக்கு சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது. நம் பிள்ளைக்கே பைத்தியம் முற்றிப் போனால் சங்கிலி போட்டுக் கட்டிப் போடுகிறோமே. இது பாபமாகுமா? அவனுடைய நன்மைக்காகவும், அவனால் ஊராருக்குக் கஷ்டம் வரக்கூடாது என்ற பரோபகார எண்ணத்திலும் இப்படிக் கட்டிப் போடுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The question arises: Is there any action that does not spring from desire or hatred? I will give an example. When a judge awards punishment to a man found guilty of crime is he driven by desire or hatred? His sentence may seem cruel but it is indeed for the universal welfare as well as Aathmic well-being of the accused himself. If one’s son is suffering from advanced insanity does one not keep him tied to chains? Is that sinful? It is for the son’s own good as well for the good of others who otherwise may be harmed by him. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Leave a Reply