Periyava Golden Quotes-205

album2_100

யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நியாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக் கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாவமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில். அப்படியானால் எது பாப காரியம்; எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Arjuna asks Lord Krishna whether it is not a sin to wage war and slay friends, relatives in the battle. It seems to us as a logical and reasonable question. Sri Krishna Paramathma gives an answer in Srimad Bhagwad Gita. An action that outwardly seems to be bad and cruel need not necessarily be sinful. Acts that apparently cause pain to others may have to be committed for the good of the world and there is no sin in them. Then what action is sinful and what is meritorious? The Lord answers this question also. Only such deeds that are motivated by desire and hatred can be sin. Those performed for the well being of the world without being impelled by desire and hatred are meritorious even though they may seem to be cruel. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: