Jayanthi of Jayanthi’s Special-Adi Sankara & 72 Religions-Gems from Deivathin Kural

AdiSankara_without_saffron

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Sri Adi Aacharyal’s tremondous feats in reviving Sanatana Dharma has been delightfully explained by Sri Periyava below. Thanks to Shri S.T. Ravikumar, our sathsang seva volunteer for the translation below. Ram Ram


எழுபத்திரண்டு மதங்கள்

எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தும் அந்த எழுபத்திரண்டில் பலவற்றுக்குப் பெயர்கூடத் தெரியவில்லை! இப்படிச் சொன்னவுடனேயே, ‘பார்த்தேளா? இந்த மாதிரிதான் ஆதாரம் காட்டமுடியாமலே கதை கட்டுவது நம் வழக்கம். இப்படிப் பண்ணித்தான் ‘ஹிஸ்டரி’ என்பதேயில்லாமல் எல்லாம் ‘மித்’ (myth) -ஆக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஆக்ஷேபிக்க வேண்டாம்! எழுபத்திரண்டு மதத்திற்கும் பெயர் தெரியாவிட்டாலும், நாற்பது நாற்பத்தைந்தை நன்றாகக் கண்டு பிடிக்க முடிகிறது. இவற்றில் பலவற்றுக்கு ஆதாரப் புஸ்தகங்களும் ஏராளமாக உள்ளன. பல ஒரு காலத்தில் அநுஷ்டானத்தில் இருந்திருக்கின்றன என்பதற்கும் அழுத்தமாக ‘எவிடென்ஸ்’ இருக்கிறது. இவற்றில் மீமாம்ஸை, ந்யாயம், வைசேஷிகம் போன்ற சில நம்முடைய வேதாந்த மதத்திற்கே ஓரளவு வரை ஆதரவாக இருப்பதால் இன்றைக்கும் பாடசாலைகளில் சொல்லிக்கொடுத்துவருகிறோம். ‘எழுபத்திரண்டு மதம்’ என்ற பேச்சு ரொம்ப காலமாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. ஆகவே, நமக்கு அதில் சுமார் பாதி, அல்லது அதற்கு மேலேயே தெரிவதால், தெரியாமற்போன பாக்கியும் ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும்; இதில் கட்டுக்கதை ஒன்றுமில்லை, என்று அநுமானிக்க முடிகிறது.

ஆசாரியாளின் ஸமகாலத்தியவை என்றே சொல்லக் கூடிய அவரது சரித்ர புஸ்தகங்களில் அநேக மதங்களின் பெயர்களைச் சொல்லி அவற்றையெல்லாம் அவர் நிராகரணம் செய்தார் (நிராகரித்தார்) என்று விவரித்திருக்கிறது. சிவ மதங்கள், விஷ்ணு மதங்கள் மாதிரி ப்ரஹ்மாவையே குறித்ததாக ‘ஹைரண்யகர்ப்ப மதம்’ என்றுகூட இருந்திருக்கிறது! இந்த்ர மதம், குபேர மதம், இன்னும் மன்மத மதம், யம மதம் என்றெல்லாங்கூட இவர்கள் ஒவ்வொருவரையும் முழு முதல் தெய்வமாக வைத்து மதங்கள் இருந்திருக்கின்றன. இப்படியே பித்ருக்களைக் குறித்து மதம், பூத வேதாளங்களைக் குறித்துக்கூட மதம், குணங்களே கடவுள் என்று வழிபடுவது, காலமே கடவுள் என்று வழிபடுவது-என்றெல்லாம் விசித்ரமாக அந்தப் புஸ்தகங்களில் பார்க்கிறோம்.

அதிக விவரம் தெரியாத இவை தவிர, இன்னதுதான் ஸித்தாந்தம் என்று பூர்ணமாகத் தெரிந்த ஒரு இருபது, இருபத்தைந்து மதங்கள் இருந்திருக்கின்றன. என்னென்ன என்றால்: ஆசார்யாள் புது ஜீவனோடு ஸ்தாபித்த வேதாந்தம் தவிர ஷட்தர்சனம் என்ற ஆறில் மீதியுள்ள ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம், மீமாம்ஸை என்ற ஐந்து; பாசுபதம், காலாமுகம், பாகவத-பாஞ்சராத்ரம் (இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தியே ஆசார்ய பாஷ்யங்களில் சொல்லியிருக்கும்) ஆகிய நாலு; தப்பான முறையில் அவைதிகமாகப் பின்பற்றப்பட்ட காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், ஸெளரம் என்ற ஆறு (இந்த ஆறையே வைதிகமான ஷண்மதங்களாக ஆசார்யாள் ஸ்தாபித்தார்) ; வேத ஸம்பந்தமே கூடாது என்று அடியோடு ஆக்ஷேபித்து எழும்பிய பௌத்தம், ஜைனம்; அப்பட்டமான நாஸ்திகமாக, ஆத்ம விஷயமாகவே போகாமல் முழு ‘மெடீரியலிஸ’மாக இருந்த சார்வாகம் என்ற லோகாயத மதம் (பார்ஹஸ்பதம் என்று சொன்னேனே, அது) -என்று, ஒரு இருபது, இருபத்தைந்து மதங்கள் இருந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கூட்டினால் நாற்பது, நாற்பத்தைந்து தேறலாம். (எழுபத்திரண்டில்) பாக்கியுள்ள சுமார் முப்பதுக்குப் பேர்கூடத் தெரியவில்லை! பேர் தெரிந்தவற்றில் சிலவற்றுக்கு மூலப் புஸ்தகங்கள் கிடைக்கவில்லை.அதெல்லாம் எப்படியானாலும், அந்த எழுபத்திரண்டில் எதுவுமே இன்று நம் தேசத்தில் அநுஷ்டானத்தில் இல்லை!

பௌத்தம் வெளி தேசங்களில் பரவி உலகத்தின் பெரிய மதங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் அது பிறந்த நாடான இந்தியாவில் இல்லை. ஜைனம் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் நிறைய ஹிந்துமத வழிபாட்டு அம்சங்களை எடுத்துக்கொண்ட மதமாகவே இருக்கிறது. ‘ஜைன்’ என்று பேர் போட்டுக்கொள்ளும் பல பேர் ஹிந்துக்களோடு கொள்வினை-கொடுப்பனை செய்து கொள்பவராக இருக்கிறார்கள். ஆசார்ய பாஷ்யங்களில் ஜைனம் விசேஷமாக அலசப்படவில்லை. இன்னும் சொன்னால் ஆச்சர்மாயிருக்கும்-பௌத்தமத கண்டனம்கூட (ஆசார்ய பாஷ்யங்களில்) அதிகம் இராது. இந்த விஷயத்தைப் பிற்பாடு பார்க்கலாம்.

இப்போது நம் தேசத்தில் சைவமாகவும் வைஷ்ணவமாகவும் பல மதங்கள் இருக்கின்றனவென்றாலும், ஆசார்யாள் அவர் காலத்தில் கண்டனம் செய்த சைவ-வைஷ்ணவ மதங்கள் வேறே, தற்போது இருப்பவை வேறே. அவர் கண்டனம் செய்து, வழக்கற்றுப் போய்விட்ட மதங்களில் சில அம்சங்களை மாத்திரம் பிற்கால சைவ-வைஷ்ணவ மத ஸ்தாபகர்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம். ராமாநுஜாசார்யாரின் வைஷ்ணவத்தில் ஆசார்யாள் கண்டித்த பாஞ்சராத்ரக் கொள்கைகள் கலந்திருக்கின்றன. ஸித்தாந்த சைவம் (ஆசார்யாள் கண்டித்த) பாசுபதத்தை அங்கங்கே தழுவிக்கொண்டு போகலாம். எப்படியானாலும், இந்த மதங்களெல்லாம் ஆசார்யாள் அவர் காலத்தில் கண்டனம் செய்த அந்த மத ரூபங்களிலிருந்து மாறுபட்டு, அவருக்குப் பிற்காலத்தில் வந்த மத ஸ்தாபகர்கள் கொடுத்த புது ரூபங்களில்தான் இருந்து வருகின்றன.

ந்யாயம், மீமாம்ஸை போன்றவற்றுக்கு நிறையப் புஸ்தகம் இருந்து, இவற்றைப் படிப்பவர்களும் இன்றுவரை இருந்து வந்தாலும், ‘ந்யாய மதஸ்தர்’, ‘மீமாம்ஸை மதஸ்தர்’ என்றெல்லாம் அவற்றையே மதமாக எடுத்துக் கொண்டு அநுஸரிப்பதென்பது ஆசார்யாளுக்கு அப்புறம் இல்லை. இன்றைக்கு யோக மார்க்கங்கள் நிறையத் தோன்றிப் பல பேர் அவற்றின்படிப் பண்ணிப் பார்த்தாலும்கூடத் தங்களை ஹிந்துமதத்திலிருந்து பிரித்து ‘யோக மதஸ்தர்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை அல்லவா?

எழுபத்திரண்டில் பல, பேர்கூடத் தெரியாமல் ஓடிவிட்டிருக்கின்றன என்றால் ஆசார்யாள்தான் ஓட்டியிருக்கிறார்! சிலவற்றைப் புஸ்தகங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். சில, தேசாந்தரங்களில் வழக்கத்தில் இருப்பதால் தெரிகிறது. இடிந்த சிலைகள், மண்டபங்களிலிருந்தும், “ஓஹோ! முன்னே இன்ன மதம் இருந்திருக்கிறது” என்று கண்டுபிடிக்கிறோம். ஆசார்யாள் ஒருத்தர் மட்டும் வந்திருக்காவிட்டால் அவற்றைக் கண்டுபிடிக்க இத்தனை கஷ்டப்படவே வேண்டாம்! ஹிந்து மதத்தைத்தான் தேடிக் கண்டுபிடிக்க நேர்ந்திருக்கும்!


72 Religions

In spite of undertaking lot of research, even names of many of those 72 cults or religions are not known.  On saying this, do not immediately object, see, this is how we make stories without any evidence and we write lot of myths rather than history.  Even though the names of all 72 religions are not known, forty to forty-five of them are well identified.  Many of them have lot of books (literature) backing as evidence.  There is strong evidence to indicate that many of them were being practiced at some point of time.  As some of them, like Meemamsai, Nyayam, Vaiseshigam etc., corroborate with our own Vedantic religion, we are teaching them as part of the curriculum in our Vedic schools.  That there were 72 religions, is being spoken about for a long time.  Since we are aware of half or more than half of them, we are able to deduce that remaining should have also existed and that it is not mere hearsay.

Many of these find a mention in the history books written in the same contemporary time of Acharya and describe that he has censured them.  There were some cults which were based on Brahma, called ‘Hyranyagarbha’ just as there were, Vishnu based religions.  There were also religions named after Indra(lord of devas), Kuber (Lord of wealth), Manmatha (cupid), Yama (Lord of Dharma/Death), which were based exclusively on these personalities, as main deities. Similarly, we observe from these books strange practices have existed like cults based on ancestors, Ghosts, phantoms, religions based on deification of characteristics, religions based on worshiping time itself as the deity etc,.

Apart from these, about which we are not knowing much, there have been 20 to 25 religions which had specific philosophies.  These are: apart from the Vedanta philosophy established by our Acharya with renewed vigour, which formed part of the ‘Shatdharshanam’, the remaining five being Sankhyam, Yogam, Nyayam, Vaiseshigam, and Meemamsai; a group of four consisting of Paasupadam, Kalamukham, Bhagawatha-Pancharathram (these two are jointly mentioned in the commentaries of Acharya); another six consisting of  Ganapadhyam, Koumaram, Saivam, Saktham, Vaishnavam and Souram, which were followed in an improper, non-vedhic way (these were later established on Vedic principles by our Acharya); Budhism and Jainism, which were totally opposed to vedic principles, outright atheistic, non-spiritual and totally materialistic Lokayatham religion, known as Saarvagam (the one earlier referred by me as Barhaspatham), etc., there were 20 to 25 such religions.  When you add up all these, you will be able to identify 40 to 45.  So, out of 72, even names are not known in respect of the remaining, about 30 religions.  Literature in respect of some of the religions known with names, are not found.  Anyway, none of these 72 religions is being practiced in our country, today. 

Although, Buddhism spread to other nations and exists as one of the main religions in the world, it is not being followed in our country, where it was born.  Jainism, being followed to a small extent, has adopted many aspects of our Hindu religion.  Many of those who call themselves as Jains, are having marital exchanges with Hindu’s.  Jainism has not been specifically discussed in the commentaries of our Acharya.  In fact, you will be surprised to know that not much condemnation of Buddhism is also found in our Acharya’s commentaries.  We will look into this aspect, later.

The many religions, based on Saivism and Vaishnavism that we have today in our country, are different from the Saivism and Vaishnavism based religions, censured by him in His days.  It is possible that some of the aspects of those religions rejected by Him and hence discontinued, might have been adopted by the founders of the Saiva-Vaishnava religions of the later periods.  The Pancharathra principles, rejected by our Acharya are found in the Vaishnavism established by Ramanujacharya.  Saivism philosophy may have traces of the Acharya rejected Paasupadam.  Anyway, these religions are different from the ones condemned by our Acharya in his time and have taken new shape given by the founders at a later stage.

Although there is adequate literature available for Nyayam, Meemamsai and there are some people, who still read them, there is no one who has taken to follow the Nyayam faith or Meemamsai faith, etc., like in the days of our Acharya.   Today, several yoga systems have come about and there may be many following them, is it not that they do not call themselves as Yoga followers, differentiating from Hindu religion?  If many of the 72 religions have ceased to exist, even without a trace of their names, it is because, our Acharya has obliterated them.  We come to know about some of them from books, some from being followed in other countries.  We also come to know that so and so religion has existed from the remains of some buildings or broken statues. If our Acharya had not been there, we would not have found it hard to identify these religions.  Rather, we would have been searching for our Hindu religion!



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: