Periyava Golden Quotes-203

album2_102

அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்று விடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாக்கப் பழக்குவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Performing sacrifices, observing fasts and vows, building great temple towers, digging ponds, etc, were a means in the past to cleanse the mind by making it one-pointed. In the midst of such good work also one experiences difficulties, even humiliation, but one should not be daunted by criticism or obstacles. This itself becomes the means of mental purification. Then comes pranayama, meditation, etc. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Accomplishments are in spite of the problems and not in the absence of problems. Mahaperiyava philosophies are alll time philosophies.

    Gayathri Rajagopal

Leave a Reply

%d bloggers like this: