சித்தம் ஒடிக்கொண்டே இருப்பதால்தான் இன்ப துன்ப அநுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் இவை இல்லை. ஒரே முனையை விட்டு அகலாமல்—ஏகாக்ரம் என்று சொல்வார்கள்—இருக்கச் சித்தத்தைப் பழக்குவதே சித்தசுத்தி. யோக ஸித்திக்கு இதுவே உபாயம். பொதுவாக நாம் ‘யோகிகள்’ என்று சொல்கிறவர்களைப் போல் எல்லோரும் ஆரம்பத்திலேயே சுவாச பந்தம் செய்து கொண்டு உட்காருவதில்லை. ஏதாவது ஒரு நல்ல விஷயத்திலே நாம் பூரணமாக ஈடுபடப் பழகினால், அப்போது சித்தம் கூடிய மட்டும் ஆழுக்குப் படாமல் இருக்கும். சித்தத்தை நேராக அடைக்க முயன்றால் அது திமிறிக் கொண்டு நாலாதிசையும் பாயத்தான் செய்யும். எனவே சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டு விட்டால் அப்போது சித்தத்துக்கு சஞ்சலிக்க இடம் குறைந்து போகும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It is because the Chitta or Consciousness is unstill that we undergo sorrow and happiness. These disappear when the mind is still. To make the mind pure it needs to be trained in one-pointedness (Ekaakram). This is the means of yogic perfection. To start with, not all will be able to control their breath like yogins. If we are absorbed in a worthy subject, in some good work, our mind will remain untainted to some extent. If we try to control our mind in one go, so to speak, it will free itself and wander in all directions. If we keep doing some noble work or take an interest in some noble subject the mind is less likely to become unstill. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Wonderful.
Excellent divine information of Paramacharya. Once we get used to this approach we will have absolute mental clarity. Many self invited sufferings can be avoided.
Gayathri Rajagopal