Periyava Golden Quotes-200

album2_106

யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பை விட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா? ஒரு தினுசான வியோகம் வந்து விட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.) லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’ கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அநுபவமுமே துக்கம்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The opposite of yoga is “Viyoga”. When a man dies we say that he has attained ‘Viyoga’. The Lord says in Srimad Bhagawad Gita that a particular kind of ‘Viyoga’ is itself yoga. What is it? If you keep away sorrow, that is if sorrow does not attach itself to you, that itself is a Yoga,  the yoga of disconnection (Tam viyad dukha-samyoga-viyogam yoga-samjnitam.) What we normally understand to be pleasure in a worldly sense is truly sorrow. All experiences that creates separation from the Paramathma are sorrows only. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Dear Sri Mahesh

    Nice photograph of Mahaperiayava surrounded by so many vedic scholars. Where is photo was taken and on what occassion?

Leave a Reply

%d bloggers like this: