Periyava Golden Quotes-199

album2_107

யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக் கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்து விட்டோம், அதற்கப்புறம் நாம் என்று ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடக்கி விடுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

People usually think that yoga means no more than controlling the breath and sitting stone-like. The literal meaning of the word is “associating”, “uniting”. All through our life’s journey we have to associate ourselves with various objects. But such associations are not permanent. That is why the mind remains unsteady. If we are associated to an object without the least possibility of being separated from it, it is yoga in the true sense. The root of the minds of all of us is the one Paramatman. Yogins control their breath to turn their mind to this prime root object. The root that gives rise to thoughts is the same as the root that gives rise to the breath. So if the breath is fixed on the root, the mind too will be absorbed in it. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: