Periyava Golden Quotes-198

album2_110

உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பது போல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால் அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்! ‘ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்று தானே நமக்குத் நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு, கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துதான். மனோதத்துவத்தின்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம். ஈசுவரனின் கல்யாண குணங்களையே எண்ணுவதால் நம்மிடமுள்ள தோஷங்கள் நீங்கி நாமும் நல்லவர்களாகிறோம். எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம் செய்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If rituals are not necessary for true Aathmic knowledge, even the Murthi called ‘Eshwara’ is not necessary for the same. But we can dispense with rituals and Eshwara only when we reach a high plane of knowledge. At first Eshwara is very much necessary for our inward journey and there are so many reasons for it. I will tell you one. We need an entity that exemplifies all that is good. Have we not for ages thought of Eshwara as such a one, one who represents all virtues and all auspicious qualities. When we mention the word “Eshwara” we at once think of him as one without any evil. If anything or anyone combines beauty, compassion, power, and enlightenment to the full it must be ‘Eshwara’. It is a psychological principle that we become that which we keep thinking of. By meditating on Eshwara’s manifold auspicious qualities our own undesirable qualities will give place to good ones. There are many benefits that flow from rituals, puja, etc. One of them is that they help to make us good. They also provide us value in taking us to the path of workless yoga and the inward quest (Gnana). – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: