புத்தர் வைதிகச் சடங்குகளை விதிக்கவில்லை. ஆனால் அவரும் ஒழுக்கத்தை — சீலத்தை — மிகவும் வற்புறுத்தினார். நேரு பஞ்சசீலம் பஞ்சசீலம் என்று சொல்லி வந்தாரே, அந்த சீலம் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியம். வைதிகச் சடங்குகள் இல்லாமலே புத்தர் சீலத்தை மட்டும் வற்புறுத்தினார். பூர்வ மீமாம்சகர்களோ, வைதிக கர்மாக்களே போதும், ஈஸ்வரனைப் பற்றிக் கூடக் கவலைப்பட வேண்டாம் என்றார்கள். ஆனால் நம்முடைய ஸநாதன தர்மத்தில் சடங்குகள், கர்மங்கள் அவற்றின் மூலம், சீலம், அதோடு ஈசுவர பக்தி, பிற்பாடு ஆத்மஞானம் என்கிற ரீதியில் எல்லாம் இணைத்துத் தரப்படுகிறது. வெறுமே சீலம் வராது. பால் வேண்டும் என்றால் பசுவை வைத்துப் போஷிக்க வேண்டும். பசுவை வைத்துப் போஷித்தால் பால் கிடைப்பது மட்டுமின்றிச் சாணமும்தான் கிடைக்கும்; வைக்கோல் கூளமும்தான் சேரும். அப்படியே கர்மப் பசுவை வளர்த்தால்தான் சீலம் என்கிற பால் வரும். அதோடு, சாணம் கூளம் போல், விரும்பத்தகாதவை என்று சிலருக்குத் தோன்றுகிற சில விளைவுகளும் உண்டாகலாம். சாணத்தையும் கூளத்தையும் சுத்தப்படுத்திவிட்டு பசுவைப் போஷித்து வருவதே புத்திசாலித்தனம். சடங்குகளின் உண்மைப் பயனை இவ்விதமே பெறவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Buddha did not prescribe any Vedic rites. But he too laid stress on morality and discipline. The Panchaseela principle that Nehru often spoke about is of utmost importance to the Buddhists. Buddha points to the value of morality without the performance of Vedic rites. What about the Purva Mimamsakas? They believe that Vedic rites are of the utmost importance and that is no need to worry about God. In our Sanatana Dharma, however, there is a weaving together of rituals/rites, the good conduct, and discipline arising out of them, devotion to Eshwara and finally knowledge of the Self. Morality does not arise by itself. If you want milk you must keep a cow. If you have a cow you will get not only milk but also cow dung. Then there will come up a haystack. When you keep the cow called ‘Karma’ you will not only derive morality and good conduct from it but also something that you feel is not wanted, that is cow dung. So you have to keep the cow, as well as clean the cow dung and haystack; that is smartness. It is in this manner that you must obtain the real benefits from religious rites. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Thanks for the great translation
What a great message – just incredible