Periyava Golden Quotes-196

album2_114

சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிற போது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு, ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவது போலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஓர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (Discipline) உட்படுகிறான். இதைச் சாப்பிடக்கூடாது, இந்தப் போக்கிய வஸ்துக்களை அநுபவிக்கக் கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (Will-power) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன. ஆக, ‘வெறும்’ சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (Morality) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The proper thing for ordinary people is to conduct all the rituals/rites as mentioned in the sastras. The benefits obtained from them can be seen clearly in practice. When a person takes care to go through the rituals/rites strictly in the manner prescribed in the sastras, he will gain one-pointedness of mind. This should be of immense help to him in contemplating and realizing the Self, later. The desire to follow the sastras in all aspects of life will mean that he will be brought under certain discipline. When we conduct rites according to the sastras our determination and will power will be strengthened. Since we subordinate our views to the injunctions of the scriptures, we will cultivate the qualities of humility and simplicity. So what do we gain by performing “mere” rituals? We will acquire one-pointedness of mind, discipline, non-attachment, will power, and humility. On the whole it will help us lead a good moral life. Without good moral conduct there will never be Aathmic inquiry and Aathmic experience. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Excellent message by Mahaperiyava. Our will power and mental focus has complimentary effect towards each other. This is very much needed for our day to day life. If we follow all Mahaperiyava’ preachings we will certainly lead a life of fulfillment and serenity.

    Gayathri Rajagopal

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading