All Pervading Grace!

album2_113

Jaya Jaya Shankara Hara Hara Shankara – The divine grace continues to flow…Thanks to Shri SS Dinesh, our sathsang seva member for the translation. Ram Ram.


எங்கேயும் வியாபிக்கும் பேரருள்

ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம். அவர் இந்திய ராணுவத்தில் மெடிக்கல் ஆபீஸராக பணியாற்றியவர். ஜப்பானை எதிர்த்து பர்மாவில் போர் நடந்தபோது அங்கே பாதிக்கப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி புரிந்தார்.

அப்படி இவர் போர் களத்திலிருந்த சமயம் ஒரு குண்டு இவரையும் தாக்கியதில் மயக்கமுற்று விழுந்து விட்டார். நினைவின்றி விழுந்து கிடந்தவர் தான் ஒரு முதல் உதவி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். உடனே தன் கீழ் வேலை செய்த ஒரு சிப்பாயிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.

அவனோ படிப்பறிவில்லாதவன். டாக்டருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டவன். ஆனால் டாக்டர் மயக்கமடைந்து விழுந்ததும் நிலை குலைந்து நின்றுவிட்டான்.

என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தவன் முன் ஒரு சந்யாசி, காவி உடையுடன் தோன்றினாராம். “ஏன் இப்படி ஒண்ணும் செய்யாம நிக்கறே… உடனே டாக்டரை உன் தோளில் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடு” என்று சொல்லி மறைந்து விட்டாராம்.

உடனே அந்த சிப்பாயும் டாக்டரை கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகக் கூறினான். ஏதோ படிப்பறிவில்லாதவன் கூறுகிறான் என்று டாக்டர் அலட்சியமாக இருந்து விட்டார்.

சில மாதங்களில் இவர் பூர்ண குணமானார். போர் முடிந்ததும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிக்க வந்தார்.

ஸ்ரீபெரியவாளிடம் அந்த சிப்பாய் சொன்ன அபூர்வ நிகழ்ச்சியை கூறலாமென்று தோன்ற டாக்டர் மெதுவாக ஆரம்பித்தார். “எனக்குப் போர்களத்திலே குண்டடி பட்டு மயக்கமா விழுந்துட்டேன்” என்று தொடங்கி மற்றவைகளை சொல்வதற்கு முன் சர்வ வ்யாபியான ஈஸ்வரர் முந்திக் கொண்டவராய், “எனக்குத் தெரியுமே…. நானே அங்கு வந்திருந்தேனே… நீ என்னைப் பார்க்கல்லே” என்றதும் டாக்டருக்குப் பெரும் திகைப்பு! அடடா! அந்த சிப்பாய் சொன்னது அத்தைனையும் உண்மை என்பது புரிந்தது. எங்கும் நிறை பிரம்மமாய் ஸ்ரீமஹாபெரியவா வியாபித்தருளி தன்னைக் காப்பாற்றியுள்ளதையும் அதை அந்த ஈஸ்வரரே சாட்சி சொல்லி மெய்ப்பித்து அருளியதையும் உணர்ந்து உருகினார்.

அந்த மிலிடரி டாக்டர் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவத்தை கண்களில் நீர் வழிய விவரித்ததாக டாக்டர் கல்யாணராமன் கூறுகிறார்.

இப்பேற்பட்ட பெருங்கருணை தெய்வத்தின்மேல் நாம் கொள்ளும் பூர்ண சரணாகத பக்தி நம்மையெல்லாம் சகல தோஷங்களிலிருந்து விடுபடச் செய்து எல்லா நலன்களையும் ஈந்து சகல சௌபாக்யங்களுடனும், சர்வ மங்களங்களுடனும் காப்பாற்றி அருளும் என்பது சத்தியம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!


All Pervading Grace

This was a rare experience that happened to a doctor. He was serving in Indian Army as a medical officer. He was treating soldiers injured during the war against Japan that took place in Burma.

When he was in the battlefield, once he was also attacked by a bomb and he lost his consciousness and fell down. Later he realized that he was lying in a first aid hospital. Immediately, he asked about the details to a soldier who was reporting to him.

That soldier was an illiterate and was sent just to assist the doctor. But, when the doctor lost his consciousness, he trembled. As he was standing without knowing what to do, a Sannyasi in a saffron robe appeared there and asked, “Why are you standing without doing anything? Immediately take the doctor on your shoulders and go to the nearest hospital”.

After saying this, he disappeared. The soldier told that he got some courage after hearing those words, brought the doctor and got him admitted in the hospital. Doctor did not take soldier’s words seriously as the soldier was an illiterate.
After few months, he got completely cured. Once the war was over, doctor came to have darshan of Sri Sri Sri Maha Periyava. As he thought of saying those soldier’s words to Periyava, he slowly started narrating the incident. As he started to say “I got injured in the battlefield and fell unconscious”, before he proceeded further, omnipresent Periyava started saying “I know…I myself came there…you did not see me”. When the doctor heard this, he was stunned and started realizing that the soldier’s words were true. After realizing that the omnipresent Brahmam Sri Maha Periyava himself came and saved him and the same Eshwara also confirmed that, he was moved.

Dr. Kalyanaraman says that military doctor himself told this thrilling incident to him with teary eyes.

If we all surrender and pray to Periyava, such a compassionate God, it is true that He will liberate us from all sins and will also protect by showering all goods.

Jaya Jaya Shankara! Hara Hara Shankara!

 Categories: Devotee Experiences

Tags:

7 replies

 1. Maha Periyava Picture shown is rare and not seen before by me! To me, it has an unusualand great resemblance to Mahan Sri Chandrasekhara Bharathi Maha SwamigaL of Sringeri saradha Peetham and who was a contemporary of Maha Periyava! Both are Jivan Mukhthas and PraNams to Them both! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 2. Very true! Maha Periyava is all Pervading, Eternal and physical laws would not bind Him! Yet as Sri. Ravi says very correctly,He never encouraged miracles and would not talk about it. Yet being God incarnate, He was performing them with least amount of consciosnwss and it is for us Devotees to realise that and benefit.
  Let us pray at His Lotus feet to give us real Gnanam and Moksham! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 3. Certainly He is all pervading grace. He is the core being in every living entity, and hence He knows exactly when to manifest His grace in which way He wants. Devotees who have experienced Him will vouch for this statement of mine.

  I do not think that His Holiness has to travel in space time to go from point A to point B. He just have to align His thought towards a manifestation and His grace will be there in an appropriate form. In this case, He manifested a vision in the mind of the person who carried the doctor.

  To me, such events are very scientific in nature. Most of the answers are in Quantum Theory.

  My 2 cents.,,

 4. Jaya Jaya Shankara..

  This incident has happened as per the first hand information received and shared by Dr. Kalyanaraman. When I listened today, I don’t hear him mentioning the year. He says that there is a war and Japanese were on the other front.

  Information certainly gets lost and/or changes when it goes from people to people. It is certainly important that we ensure the source is verified.

  In this case, there is some additional twist (especially on the year) that needs to corrected and republished.

  This is one of the main reasons Pujya Sri. Mahaswamiji never claimed to have done any miracles. Because we can be lost in some of the details and leave the central message, Mahaperiyava always attributes miracles and blessings to Kamakshi.

 5. https://www.youtube.com/watch?v=zMxOYD7gwQM

  Dr. Kalyanaraman talks about this in the video link above starting at 25:00 mts

  ஸ்ரீ மஹா பெரியவா ஶரணம்
  ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

 6. பெருங்கருணை தெய்வத்தின்மேல் நாம் கொள்ளும் பூர்ண சரணாகத பக்தி நம்மையெல்லாம் சகல தோஷங்களிலிருந்து விடுபடச் செய்து எல்லா நலன்களையும் ஈந்து சகல சௌபாக்யங்களுடனும், சர்வ மங்களங்களுடனும் காப்பாற்றி அருளும் என்பது சத்தியம்!

  ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

 7. There is something unbelievable about this post. IN 1956 THERE WAS NO WAR WITH JAPAN IN THE BURMESE THEATRE.. The second world war was over by 1945 when JAPAN surrendered. Either there
  is confusion about the year or this is not a real life incident.Please verify and confirm.

Leave a Reply

%d bloggers like this: