நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியன வெல்லாம் ‘வெறும்’ சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம். உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் ‘வெறும்’ சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Some ask me whether religious functions, puja, etc, are not “mere” rituals? Aathmic awareness is an inward experience. As for rituals, they are outward actions. The question is how rituals will help in experiencing the Self. Rituals are indeed not necessary for one who has realised the Self. But we must put the question to ourselves whether we have truly realised It, whether we are mature enough for realisation, whether we have become inwardly pure. If we are honest we will admit that we are way far from having become mature for awareness of the Self. By taking many births, by performing many works and by the vasana of previous lives, we have concealed the bliss of knowing the Self. By conducting good rites, and by associating ourselves with noble objects, we have to banish the evil habits sticking to us from our past lives. Then there will be an end to karma itself and we will embark on Aathmic inquiry. Until then it is very important for us to perform what are called “mere” rituals. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Leave a Reply