Periyava Golden Quotes-194

album2_111

நான் சம்ஸ்காரங்களை முக்கியமாக சொல்வதோ ஆசாரங்களை விடாமலிருக்கப் பிரயத்தனம் செய்வதோ விபூதி, ருத்ராஷம் முதலிய சின்னங்களைத் தரிப்பதோ, பெரிதில்லை. நான் மடாதிபதி. ஆதலால் இதெல்லாம் என்னிடம் இருந்தால்தான் என்னிடம் வருவீர்கள்; என் மடம் நடக்கப் பணம் கொடுப்பீர்கள். எனவே இவையெல்லாம் எனக்குக் காரியார்த்தமாக, வேண்டியிருக்கின்றன. ஆனால், உங்கள் விஷயம் அப்படியில்லை. உங்களுக்கு ஜீவனோபாயம் வேறு விதத்தில் கிடைத்து விடுகிறது. ஆதலால் என்னைவிட சிரேஷ்டமாக, முழுக்க முழுக்க ஆத்மார்த்தமாகவே நீங்கள் சமஸ்காரங்களைச் செய்து, சின்னங்களைத் தரித்துக் கொண்டு பரிசுத்தம் பெற முடியும்; பெற வேண்டும். பரம சத்தியத்தை நினைவூட்டும் சின்னங்களைத் தரித்துக் கொள்வோம்; கெட்ட வழியில் போகாமல் தடுக்கும் நல்ல கர்மாக்களை அநுஷ்டிப்போம்; அதனால் சீலம் பெறுவோம்! சித்த சுத்தி பெறுவோம்; இந்தத் தெளிவின் பயனாக அனைத்துமான ஏக பரம்பொருளைத் தியானித்து, தியானித்து, அதை அநுபவத்தில் உணர்ந்து, ஆனந்தமாக இருப்போம்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It perhaps natural that I should give importance to samskaras, to the custom of wearing symbols like Vibuthi (sacred ash), rudraksha, etc. After all, I am the head of Sri Madam and you will come to me only if I wear all these. You will give me money for running the Madam. So all these symbols that I wear serve a purpose in my case. But your case is different. You have your own means of livelihood and you may be able to and should perform samskaras even more sincerely than I do and make yourself pure by wearing the symbols of our religion. Let us wear the signs that remind us of the Supreme Truth. Let us perform the rituals/rites that keep us away from evil. Let us be of good conduct and character and cleans our consciousness. And let us meditate on the Ultimate Reality, experience It inwardly, realize bliss. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: