மிலிடரிக்காரன் யூனிஃபாரம் போடாவிட்டால் அவனுக்கு வீரம் வராதா என்று கேட்பவர்கள் கேட்கலாம். ஆனால் மிலிடரிக்காரன் என்றால் லோகம் முழுக்க அவனுக்கென்று யூனிஃபாரம் இருக்கத்தான் இருக்கிறது. அதுவே வீரத்தைத் தூண்டுகிறது என்றும் சொல்கிறார்கள். வெளியில் தரிக்கும் சின்னம், வெளியில் செய்கிற சமஸ்காரம் இவை உள்ளுக்கும் நன்மை தருவனவே ஆகும். வெறும் வேஷம் என்று நினைத்தால் வேஷமாகவே போகும். ‘ஆத்மார்த்தமாக, ஜீவனைப் பரிசுத்தம் செய்து கொள்வதற்காக இந்த சம்ஸ்காரத்தைச் செய்கிறேன்; சின்னத்தை அணிகிறேன்’ என்று உணர்ந்து செய்தால் சத்தியமாகவே அது உள்ளே புகுந்து சுத்தி செய்கிறது. புறத்தில் செய்வது உள்ளுக்கு உதவுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Will soldiers be less valorous if they do not wear their uniforms? All over the world members of the defence services wear uniforms and it is claimed that they keep them fighting fit and inspire courage in them. The symbols worn outside, the samskaras performed outwardly, are inwardly beneficial. If you think that it is all a sham so it will be. You must resolve to wear the symbols in all sincerity and perform the rites too. Then they will truly cause purity within. Outward action help you inwardly. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Leave a Reply