Periyava Golden Quotes-192

7

“எல்லோரும் அவரவருக்கு உரிய கர்ம அநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்; ஆசாரங்களை அநுசரிக்க வேண்டும்! விபூதி, திருமண், ருத்ராக்ஷம் போன்ற சின்னங்களைச் தரிக்க வேண்டும்” என்றெல்லாம் நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். சிலர் இதெல்லாம் எதற்கு என்று நினைக்கிறார்கள். “நல்ல சீலங்களுடன் இருக்க வேண்டியதே முக்கியம். சீலம் மனசைப் பொறுத்த விஷயம். சமய ஆசாரங்களெல்லாம் வெளி விஷயம்தானே?” என்று எண்ணுகிறார்கள். உண்மையில் வெளியில் செய்கிற காரியமும், வெளியில் அணிகிற சின்னங்களும்கூட உள்ளுக்கு நன்மை செய்கின்றன. உடலின் காரியமும் உள்ளத்தின் பாவமும் பரஸ்பரம் சம்பந்தமுடையவை. ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்; லாட்டரியில் தமக்கு லட்ச ரூபாய் விழுந்திருக்கிறது என்று ஒருவர் சற்றும் எதிர்பாராமல் கேள்விப்படுகிறார். உடனே எல்லையில்லாத சந்தோஷம் உண்டாகிறது. இது ஒரு மனோபாவம்தான். ஆனால் இந்த மனோபாவம் காரணமாக அவரது உடம்பில் ஒரே படபடப்பு உண்டாகிறது. மூச்சு அப்படியே சிறிது காலத்திற்கு அடங்கி மூர்ச்சையாகி விடுகிறார். ‘குறிப்பிட்ட உணர்வு உண்டானால் இன்ன விதமான சுவாசம் மாறுகிறது’ என்ற நடைமுறை உண்மையைத் திருப்பி வைத்துக் குறிப்பிட்டபடி சுவாசப்பயிற்சி (பிராணாயாமாதிகள்) செய்தால், இன்ன விதமான உத்தமமான மனோபாவங்களை அடையலாம் என்று யோக சாஸ்திரம் விவரிக்கிறது. வெளித்தோற்றமே உள் உணர்வைச் சொல்கிறது. கோபம் வந்தால் கண் சிவக்கிறது; உதடு துடிக்கிறது. துக்கம் வந்தால் எதற்காகவோ கண்ணிலிருந்து ஜலம் ஜலமாகக் கொட்டுகிறது. சந்தோஷம் வந்தால் பல்லெல்லாம் தெரிகிறது. இப்படியெல்லாம் உடம்புக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் இன்னபடி ஆசனம் போட்டால் இந்தந்த ஆத்ம குணங்களுக்கு அநுகூலமாகும் என்று மகான்கள் வழி கண்டிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

I have stated again and again that the people must perform the rituals/rites handed down to them from forefathers, that they must adhere to the practices pertaining to the tradition to which they belong and they must wear the symbols appropriates to the same, like Vibuthi (holy ashes), Thiruman, the Rudraksha, etc. Some people hold the view that all that is needed is good conduct and character, that conduct is a matter of the mind, that religious customs are but part of the external life. In truth, however, your outward actions and the symbols worn by you outwardly have an impact on the inner life. There is a relationship between bodily work and inner feelings. Let me illustrates this truth. One day, unexpectedly, a man comes to know he has won prize in a lottery, say, one lakh rupees. His joy knows no bounds, but it makes its own impact on his body. He becomes so excited that his breathing itself stops for a moment and he faints. “A particular feeling creates a specific change in the process of breathing”. From this practical observation yoga develops lessons in breathing to create healthy and noble feeling and urges. Often the outward appearance reflects the inner feelings. When you are angry your eyes become red, your lips quiver. When you are sorrowful your eyes become moist and you shed tears. If you are happy you are agape, showing all your teeth. Thus there is a definite connection between the body and the mind, between the body and the inner feelings. Based on this fact, the wise have devised yogic postures that are calculated to nurture particular Aathmic (internal) qualities. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. This is. Not only golden quote. But is blessings to all.By adopting or following. the. Quote. Traditional customs. Never fade

  2. குறை ஒன்றும் இல்லை! காஞ்சி மகானே!

    குறை ஒன்றும் இல்லை எமக்கு! (2)

    கண்ணை இமை காப்பதுபோல் எம்மை நீரே காக்கின்றீர்!

    கண்ணை இமை காப்பதுபோல் எம்மை நீர்தான் காப்பதால்! (குறை ஒன்றும்)

    ஊன கண்களினால் உமை நானும் கண்டதில்லை!

    மனமெனும் கோவிலிலே மகானே நீர் வாழ்வதால்! (குறை ஒன்றும்)

    ஊழ் வினைகள் சூழ்ந்தாலும் உம் கரமதுதான் காத்திடுமே!

    உறுதிதான் மனதிருக்க ஏது குறை எமக்கு! (குறை ஒன்றும்)

    ’’நான் இருக்கேன்’’ என்று சொல்லி எம்முடனே நீர் இருக்க!

    மனமதனில் குறைதான் வந்திடுமோ குருவே! (குறை ஒன்றும்)

    கேட்டதை கேட்டபடி தந்திடவே நீர் இருக்க!

    கண நேர குறைதான் வந்திடுமோ வாழ்வதனில்!

    காஞ்சி வாழ் மகானே! எம் குருவே! சரணாளே!

Leave a Reply

%d bloggers like this: