Periyava Golden Quotes-191

8

Jaya Jaya Shankara Hara Hara Shankara – What an crystal clear explanation of how to ripen ourselves!! Ram Ram

இப்போது நாம் இருக்கிற மாதிரி, கண்டதே காட்சி என்று இருக்கிறதும் தப்பு; அதற்காக, நாம் தீர்க்க வேண்டிய கர்மா மூட்டை ஏகமாக இருக்கிற இப்போதே, நமக்கும் பரம ஞானம் உடனே வந்துவிட வேண்டும் என்று தவியாகத் தவித்து ஆத்திரப்படுவதும் தப்பு. நாம் இப்போதே பரம ஞானம் வேண்டுமென்று அதைத் தேடிப் போக வேண்டாம். இந்த ஜன்மத்திலே வரவில்லை என்றால் எத்தனை ஜன்மம் கழித்தாவது வரட்டும் என்று கருதி, நம் கடமைகளைச் செய்து கொண்டிருப்போம். நம்முடைய வேதம் விதிக்கிறபடி தர்மத்தை அநுஷ்டானம் பண்ணுவோம். அப்படிச் செய்தால் படிப்படியாகப் பரம ஞானமும் தானே வந்துதான் ஆக வேண்டும். இப்போது நமக்கு வெளிக் காரியங்கள், வெளி வேஷங்கள்தானே தெரிகின்றன. அதனால் மத சம்பந்தமாகவும் வெளிக் காரியங்களாக இருக்கிற சடங்குகள், வெளியே போட்டுக் கொள்கிற சமயச்சின்னங்கள் இவற்றிலேயே ஆரம்பிப்போம். படிப்படியாக பக்குவமாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகிய உள்ளேயிருக்கிற தத்துவத்துக்குப் போவோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We should not, however, remain always in the same state as the one in which we find ourselves today, indifferent to everything. At the same time, when our bag of sins still to be emptied, we cannot thirst for the supreme knowledge. Instead, let us keep doing our duty hoping that we will realise the supreme knowledge, if not now, after many a birth. Let us adhere to the dharma anushtanas prescribed by the Vedas. If we do so, we will proceed gradually to the supreme jnana. Now we are aware only of outward matters and outward disguises. So let us start with the outward rites of our religion and the outward symbols and signs. By degrees then let us go to the inner reality through the different stages from that of the tender fruit to the fruit that is mellow and sweet. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

Leave a Reply

%d bloggers like this: