Periyava Golden Quotes-190

album2_119

புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும்; துவர்ப்பு இருக்க வேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும். ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல் பிஞ்சு அனவரதமும் பழமாகிக்கொண்டே இருப்பதுபோல் நாமும் மேலும் மேலும் மாதுரி்யமான அன்பையும் சாந்தத்தையும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் நாமாகப் போய் மோக்ஷத்தைத் தேட வேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால், தானாக மோக்ஷம் என்கிற மதுர நிலை வந்துவிடும். அப்படியில்லாமல் தகாத பருவத்தில் முயற்சி செய்தால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான். அது வெம்பல்தான். அதில் மதுரம் இருக்காது. “வெம்பி விழுந்திடுமோ?” என்று இராமலிங்கர் பாடின மாதிரி நாம் வெம்பிப் போவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There must be astringency when it is time for astringency and sourness when it is time for sourness. But neither astringency nor sourness must remain a permanent state. Just as a tender fruit becomes mellow, we too must become mellow and sweet. If we do so there is no need to seek liberation on our own. If we are as we should be in the different stages of our life, liberation shall come in the natural process. On the other hand, if we make and effort at an inappropriate time [if we force ourselves] it will be like making the fruit prematurely ripe. This is what Shri Ramalinga Swamigal says “Vembi Vizhundhudumo” (Prematurely ripe)? Such a fruit will not taste sweet. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. JAGAT GURAVE SARANAM JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA

Leave a Reply

%d bloggers like this: