Periyava Golden Quotes-189

Periyavar-1960s by APR
Jaya Jaya Shankara Hara Hara Shankara – What a super quote!! Ram Ram

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும் பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும்போது மூக்குக்கும் பழமாக இருக்கும்போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் ஆகிறது. மதுரம் என்பதுதான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய் விடுகிறது. பழத்தில் மதுரம் பூராவாக நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அதுபோல் இருதயத்தின் எல்லா இடத்திலும் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும்வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பில் ஜலம் வரும். காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயை விட்டுவிட விரும்பவில்லை; காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிரைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றும் போய்விடும்! பழம் தானே இற்று விழுந்துவிடும். மரமும் பழத்தை விடுகிறது; பழமும் மரத்தை விடுகிறது. இரண்டும் ஜலம் விடாமல் — அதாவது அழாமல் — ஆனந்தமாகப் பிரியும். படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமயமான ஒவ்வொருவனும் இப்படியே ஆனந்தமாக சம்ஸார விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுவான். பழமாக ஆவதற்குமுன் ஆரம்ப தசையில் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றனவோ அதுபோலக் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதாம் போலிருக்கிறது! இவற்றுக்கு நாம் ஆரம்ப தசையில் ஆட்படும்போதே, இவற்றிலிருந்து பூரணமாக விடுபட முடியாது. ஆனாலும், இவையெல்லாம் ஏன் வருகின்றன என்று அடிக்கடி நினைத்தாவது பார்க்க வேண்டும். ‘இப்போது இன்ன உணர்ச்சி வந்ததே! ஆசை வந்ததே! கோபம் வந்ததே! பெருமை வந்ததே! பொய் வந்ததே! இதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இந்த உணர்ச்சி அவசியமாக வருகிறதா? அநாவசியமாக வருகிறதா?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைக்கவில்லையென்றால் அவை நம்மை ஏமாற்றி விடும். ஏமாந்து விடுவோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The fruit is formed from the flowers, first in the tender unripe form and finally in the mellow form. The flowers smells fragrant to the nose and the ripe fruit tastes sweet to the palate. The mellow or ripe fruit is full of sweetness. How did the fruit taste before it became ripe and sweet? The flower was bitter, the tender fruit was astringent, the unripe fruit was sour, and the fruit that is mellow now is sweet. Peace means sweetness. When the heart is all sweetness all attachments disappear. There is attachment only so long as there is sourness. When you pluck an unripe fruit from a tree there is sap in the stem as well as in the fruit. It means that the tree is not willing to part from the fruit and vice versa. But when the sweetness is full, all the ties will be snapped and the fruit will drop to earth by itself. The tree releases the fruit or the fruit frees itself from the tree. The separation is without any tears and happy [there is no sap]. Similarly, step-step by step, a man must become wholly sweet like a mellow fruit and free himself happily from the tree of samsara, the cycle of births and deaths. Desire, anger, and so on, are necessary stages in out development like bitterness, astrigency, sourness, and sweetness in the growth of a fruit. When we are subject to urges like desire and anger we will not be to free ourselves fully from them but we must keep asking ourselves why we become subject to these urges and passions. We must constantly wonder whether they serve any purpose. If we do not remain vigilant about them we will become victims of their deception. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. இப்போது இன்ன உணர்ச்சி வந்ததே! ஆசை வந்ததே! கோபம் வந்ததே! பெருமை வந்ததே! பொய் வந்ததே! இதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இந்த உணர்ச்சி அவசியமாக வருகிறதா? அநாவசியமாக வருகிறதா?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைக்கவில்லையென்றால் அவை நம்மை ஏமாற்றி விடும். ஏமாந்து விடுவோம்

    அய்யனே இந்த உணர்ச்சிகளுக்கு என்ன பெரிய சக்தி, மீண்டும் மீண்டும் ஏற்பட்டு படுகுழியில் மனதை தள்ளுகிறதே …

    இப்போது பூவா பிஞ்சா காயா தெரியலியே பெரியவா … மதுரமாக வேண்டும் நீர் தான் அருள வேண்டும்

  2. இதை விட வேதந்தத்தை எளிமையா யாராவது சொல்லமுடியுமா?

Leave a Reply

%d bloggers like this: