Periyava Golden Quotes-188

Murugan_Periyava

‘இந்த ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது?’ என்று நம் ஆசாரியாள், ‘பிரச்னோத்தர ரத்ன மாலிகா’வில் ஒரு கேள்வி போடுகிறார்,’கிம் ஸம்ஸாரே ஸாரம்?’ என்று கேட்கிறார். (ஸம்ஸாரே – ஸம்ஸாரத்தில்; கிம் – என்ன; ஸாரம் – சாரம் இருக்கிறது?) அதற்குப் பதிலும் சொல்கிறார்: ‘அப்பா, இப்போது இப்படிக் கேள்வி கேட்டாய் அல்லவா? இதை எப்போதும் கேட்டுக்கொண்டே இரு. அதுவே ஸம்ஸாரத்தின் ஸாரம்’ என்கிறார். பஹுச: அபி விசிந்த்யமானம் இதம் ஏவ. அதாவது, ‘நாம் பிறந்ததற்கு என்ன பிரயோஜனம்? எதற்காகப் பிறந்தோம்?’ என்று அடிக்கடி நினைக்க வேண்டும். அந்தப் பிரயோஜனத்தை அடைவோமா என்று நினைக்க வேண்டும். ‘நமக்கு ஏன் பாபம் வருகிறது? கோபம் வருகிறது? காமம் வருகிறது? இவையெல்லாம் ஏன் வர வேண்டும்? எப்போதும், ஆனந்தமாக, சந்தோஷமாக இருக்கக்கூடாதா’ — என்று தோன்றுகிறது. இதற்குப் பதில் ஒன்றும் நமக்குப் புரியவில்லை. எல்லாம் நல்லதற்குத்தான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In his Prachnottara-Ratnamalika, our Acharya asks: “Samsare kim saram? “(What is the meaning of worldly existence?) He responds to the question himself:” You asked the question thus. Keep asking again and again. That is the meaning of samsara. “(“Bahusah abhi vicintyamanam idam eva.”) “What is the purpose of my birth? Why was I born? ” You must ask yourself this question again and again. You must also have some concern about whether you will reach the goal of your birth. “Why do you keep sinning?” is a problem that always worries us. “Why do you get angry? And why do we desire this and that? Can’t we remain always happy without sinning, without anger and desire?” We do not seem to know the answers to these questions. However it is all for good. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: