Periyava Golden Quotes-184

cropped-maha_periyavaa_final_image.jpg

எல்லோருக்கும் மனசு மிகவும் நன்றாக இருக்க முடியாது. இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் முடியவில்லை. வீட்டிலே இருக்கிற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக் கொண்டிருக்கிறது. கத்தரிக்கோலை எடுத்து நல்ல துணிகளை, முக்கியமான காகிதங்களை நறுக்கி விடுகிறது. செடிகளை வெட்டி விடுகிறது. இப்படித் துஷ்டத்தனம் பண்ணுகிறது. அதையே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டால், ‘இத்தனை மணிக்குள் போக வேண்டும். இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிட வேண்டும், திரும்ப இத்தனை மணிக்குத்தான் வரமுடியும், வந்தால் இதைச் செய்ய வேண்டும்’ என்று அதற்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது. முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய் விடுகின்றன. பள்ளிக்கூடம் இல்லை, லீவுநாள் என்றால் மறுபடியும் விஷம குணங்கள் தலைகாட்டுகின்றன. அதேபோல் நாம் கெட்ட எண்ணத்திலும் காரியத்திலும் ஈடுபட அவகாசம் இன்றி, நல்ல காரியங்களை ஒரு விதிப்பிரகாரம், ஒழுங்கு தப்பாமல் செய்வதுதான் முக்கியம். இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Everybody does not possess a good mind. Look at your child. It is all the time up to some mischief or other. It cuts paper with scissors or cuts down little plants and shrubs. It is naughty all the time. When the same child is sent to school it is brought under a discipline. It has fixed timings to go to school and return home, to read its lessons, etc. It is no longer found to be wayward. In the same way if we have no opportunity of being involved in evils thoughts and activities, we will also come under a certain discipline. That is why the sastras lay down rules to keep us involved in good works. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Wonderful living principle.

    Gayathri Rajagopal

  2. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  3. what a explanation!

Leave a Reply

%d bloggers like this: