கர்மாவை எல்லாம் விட்டுவிட்டு தியானம் செய்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். கர்மாவும்கூட தியானமாக இருக்கிற உச்ச நிலையும் ஒரு பக்கம் இருக்கட்டும். இவை பிற்பாடு நமக்கு வரவேண்டிய நிலைகள். ஆனால் இப்போது, நாம் உடனடியாக கர்மா செய்கிறபோதுகூட இந்த ஆரம்ப திசையிலேயே பிரதி தினமும் கொஞ்ச காலம் காரியமில்லாமல், விச்ராந்தியாக, சாந்தமாக இருப்பதற்காகச் சிறிது தியானம் செய்யப் பழகவேண்டும். கர்மா, பக்தி (உபாஸனை) , தியானம் (ஞானம்) எல்லாம் முதலில் சேர்ந்து சேர்ந்து வரவேண்டும். இதெல்லாமே ஒன்றுக்கொன்று விரோதமில்லை. ஒன்றையொன்று இட்டு நிரப்புவது (complementary) தான். கடைசியில் ஒன்றொன்றாக மற்றதெல்லாம் உதிர்ந்து தியான சமாதியில் மட்டும் நிற்கும். அந்த சமாதியின் நினைப்பாவது நமக்கு இப்போது, ஆரம்ப கட்டத்தில் இருக்கவேண்டும். அதுதானே நம் லக்ஷியம்? அதனால் அன்றன்றும் சில க்ஷணமாவது சாந்தமாக, வேலைகளையெல்லாம் விட்டு தியானம் அப்பியசிக்க வேண்டும். ஆனால், இதற்காக, “கர்மாநுஷ்டானமாவது? அதிலென்ன ஸார் இருக்கிறது? வெறும் ஸுபர்ஸ்டிஷன் என்று சொல்லாமல் — ‘ரிச்சுவல் (சடங்கு) எல்லாம் மீனிங்லெஸ் (அர்த்தமில்லாதது)” என்று சொல்லாமல், நிறைய அநுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருப்போம். இதனால் நம் சித்தமலம் போகப் போகத்தான் உள்ளேயிருக்கிற ஸ்வயஞ்சோதி அநுபவத்தில் தெரிய ஆரம்பிக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Let alone the idea of forsaking all work and becoming plunged in meditation. Let us leave aside, for the time being, karma, which, itself is transformed into the high state of meditation. These are conditions to which we must arise at a later stage in our inward journey. But right now-at the beginning-let us train ourselves in the midst of our work to remain at peace and learn to meditate a little. To start with, let karma, devotion, and meditation be practised together. These are not opposed to one another but are complementary. In the end all will drop off one by one and the samadhi of dhyana alone will remain. When we start our inward journey we must keep this goal of samadhi before us. So every day, having aside all other work, we must practise meditation for some time. But all the same we must not dismiss rituals as meaningless or superstition. We must keep performing them. It is only when our impurities are washed away thus that we will realise the self-luminous Reality in us. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Leave a Reply