‘முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான். நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும், எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும்’ என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக்கொண்டிருக்கிற நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள் — வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரமம் இதுகளையே — சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாக்ஷாத் நம் பகவத்பாத ஆச்சாரியாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை (பக்தி), முடிவில் ஞானம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Briefly put, this is the concept of Sri Adi Shankara Bhagawathpada: ultimately everything (the phenomenal world) is Maya. The One Object, the One and Only Reality, is the Brahman. We must be one with It, non-dualistically, without our having to do anything in the same way as the Brahman. I, who bear the name of Sri Sankara, keep speaking about many rituals, about puja, japa, service to fellow men, etc. It is because in our present predicament we have to make a start with rites and rituals. In this way, step-by-step, we will proceed to the liberation that is non-dualistic. It is this method of final release that is taught to us by Sri Krishna Paramatman and by our Shankara Bhagawatpada. At first Karma, works, then upasana or devotion and, finally, the enlightenment called Jnana. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Leave a Reply