முதலில் சித்தம் சுத்தமாவதற்காக ‘இதை விடு, அதைவிடு’ என்று சொல்வதைவிட முக்கியமாக ‘இதைச் செய், அதைச் செய்’ என்று பலவிதமான கர்மாக்களை விதித்திருக்கிறது. ஒரு காரியத்தில் ஈடுபடுவதே நமக்கு இயல்பாக, சுபாவமாகக் கைவருகிறது. எனவே இந்த மாதிரி, நமக்குச் சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் சாஸ்திரம் சொல்கிற காரியங்களை ஆரம்பிக்கிறோம். இதிலும் ஆரம்பத்தில் விருப்பு வெறுப்பு தலைத்தூக்கத்தான் செய்யும். இருந்தாலும் எடுத்த எடுப்பில் சிந்தையை அடக்கித் தியானம் செய்வதைவிட, ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சமாவது விருப்பு வெறுப்புகளை, சௌகரி்ய அசௌகரியங்களைப் பாராமல் கர்மாக்களை அநுஷ்டானம் செய்ய முடிகிறது. இப்படி ஒரு பிரயத்தனத்தை ஆரம்பித்துவிட்டால், அப்புறம் பகவத் கிருபையால் விருப்பு வெறுப்புகள், சௌகரிய அசௌகரிய எண்ணங்கள் மேலும் மேலும் குறைந்து ஸத்கர்மாக்களை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆசையும் துவேஷமும் குறைவதால் சித்தம் சுத்தமாகிறது. இப்படிச் சுத்தமான பிறகுதான் அது ஒருமுகப்பட்டு தியானத்தில் அமிழ முடியும். இந்த நிலையில்தான் எல்லாக் காரியங்களையும் விட்டுவிட்டு, காட்டுக்குபோய் மூக்கைப் பிடித்துக் கொள்ள முடியும். இதன் முடிவில் நல்ல தியானம் சித்தித்து விட்டால் அப்புறம் எல்லாமே பரமாத்ம ஸ்வரூபம் என்றாகிவிடும். இந்த நிலையில் எதைவிட்டும் ஓடிப்போய் காட்டில் உட்காரப் வேண்டியதில்லை. நிஷ்டை என்று தனியாக ஒன்றைச் சொல்லி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டியதுமில்லை. காடு, நாடு, ஏகாந்தம், கூட்டம் எல்லாம் பரமாத்மாதான். காரியம், தியானம் இரண்டும் பரமாத்மாதான். நம் ஆத்ம சாந்தியை எதுவுமே குலைக்காது என்றாகிவிடும். தக்ஷிணாமூர்த்தி போல உள்ள மாறாத சாந்தத்தோடு, வெளியே எத்தனை கொட்டமும் அடிக்கலாம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Many rituals are prescribed to purify the mind, the consciousness. It means that, instead of asking us not to do this and that, we are asked to do (perform) this ritual and that rite. It is natural for us to be involved in some work or other. So, without any regard for our personal likes and dislikes, we perform the rites laid down in the sastras. Even here our personal likes and dislikes will intrude but, unlike in the matter of meditation, we succeed to some extent at least in curbing them during the conduct of the rites. In due course, with the grace of the Lord, we will be able to perform good works without minding the discomfort and ignoring our personal likes and dislikes. Desire and hatred will be reduced and the mind will become pure. With the mind cleansed we will be able to perform one-pointed meditation. This is the time when we will be mature enough to forsake all works and become a forest recluse and practice meditation. If we are able to meditate with utter one-pointedness then everything will acquire the character of the Paramatman. There will be no need to leave everything and remain holding the nose with the hand. The forest, the village, solitude and crowd — they are all the Paramatman. Both work and meditation are the Paramatman. Our inner peace will not be shaken by anything. Like Dakshinamurti we can remain still and tranquil and yet be all bustle outwardly. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
We have finished our meals and are waiting for icall
Sage of Kanchi wrote: > a:hover { color: red; } a { text-decoration: none; color: #0088cc; } a.primaryactionlink:link, a.primaryactionlink:visited { background-color: #2585B2; color: #fff; } a.primaryactionlink:hover, a.primaryactionlink:active { background-color: #11729E !important; color: #fff !important; } /* @media only screen and (max-device-width: 480px) { .post { min-width: 700px !important; } } */ WordPress.com Sai Srinivasan posted: ” முதலில் சித்தம் சுத்தமாவதற்காக ‘இதை விடு, அதைவிடு’ என்று சொல்வதைவிட முக்கியமாக ‘இதைச் செய், அதைச் செய்’ என்று பலவிதமான கர்மாக்களை விதித்திருக்கிறது. ஒரு காரியத்தில் ஈடுபடுவதே நமக்கு இயல்பாக, சுபாவமாகக் கைவருகிறது. எனவே இந்த மாதிரி, நமக்குச் சொந்த விரு”