Jaya Jaya Shankara Hara Hara Shankara – I’m absolutely humbled and floored by this quote from Saakshath Sarveswaran. Pray to Periyava this should come to my mind every time ego/pride rears its head. Agreed? Ram Ram.
நீங்கள் எல்லாரும் எனக்குப் புஷ்ப ஹாரங்களை ஏராளமாகக் கொண்டுவந்து கொடுக்கிறீர்கள். உங்களைவிட நான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு, பக்தியால் இப்படிச் செய்கிறீர்கள். நீங்களே இந்த மாலைகளைப் போட்டுக் கொள்ளாமல் இங்கே கொண்டுவந்து கொடுத்தால்தான் அலங்காரமாகிறது என்று நினைத்துச் செய்கிறீர்கள். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் நானும், ‘நாம் ரொம்பப் பெரியவர்தான்’ என்று நினைத்துக் கொண்டு, இந்த மாலைகளால் என்னை அலங்கரித்துக்கொண்டால் அது அகங்காரம்தான். ஆனால், நீங்களோ எனக்குச் செய்தால் விசேஷம் என்று பக்தியோடு கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். இவற்றை நான் திரஸ்கரிக்கலாமா? அதனால்தான் நீங்கள் என்னை அலங்கரித்துப் பார்க்க ஆசைப்படுகிற மாதிரி, நானும் இந்த மாலைகளை அம்பாளுக்கு ஸமர்ப்பணம் பண்ணி அலங்காரம் பண்ணுகிறேன். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
All of you give me heaps of garlands. You do so because you think I am great and want to express your devotion for me. You also feel that instead of wearing them yourselves the garlands would be an ornament for me. If I decorate myself with them thinking myself to be a great man, it would means that I am satisfying my ego. But you bring me garlands with devotion and would it be right for me to spurn them? So just as you want to see me decorated I want to see Amba adorned and so I offer the garlands to her. – Pujya Sri Kanchi Maha Periyava.
Categories: Deivathin Kural
Definition for the word humble and humility
HaraHara Shankara Jaya Jaya Shankara
Gayathri Rajagopal
இதைப் படித்தாலாவது, நம் அஹங்காரம் கொஞ்சமாவது குறையாதா என்பதே ப்ரார்த்தனை. ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !