Periyava Golden Quotes-167

PerivaMain

Jaya Jaya Shankara Hara Hara Shankara – For the next month or so we will some very important quotes by Sri Periyava from Karma Margam section, Deivathin Kural Volume 1. Thanks to Hindu Dharma and Sri Prabhu Hariharanandanan for the translation. Ram Ram.

பலவிதமான கர்மாநுஷ்டானங்களை நான் சொல்கிறேன். இந்தக் கர்மங்கள், பரமேஸ்வர பூஜை, பரோபகாரம், எல்லாம் பிறருக்காகச் செய்யப்படுவதாகத் தோன்றினாலும் உண்மையில் தங்களுக்கே செய்து கொள்வதுதான். பிறருக்கு உபகாரம் செய்வதால், சேவை செய்வதால், அல்லது ஸ்வாமிக்குப் பூஜை செய்வதால் அவனவனுக்கும் உள்ளுக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படுகிறது. நாம் செய்கிற சேவையில் மற்றவர்களுக்கு உண்மையான லாபம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். நம் சேவை அவர்களுக்குத் தேவைப்படாமலும் இருக்கலாம். ஆனால் அதைச் செய்யும் போது நமக்கே திருப்தியும், சந்துஷ்டியும், அமைதியும் உண்டாகின்றன. ‘பரோபகாரம்’ என்று சொன்னாலும்கூட, அது பர (பிறருக்கு) உபகாரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனக்கே உபகாரமாக இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

I have, in the course of my talks, dealt with a large number of religious rites. It may seem that the rituals, the puja to Parameswara and the service done to fellow men are meant for “others”. But in truth they are meant for ourselves. By helping others, by serving them, by worshiping the Lord, we are rewarded with a sense of fullness. Others may really benefit from our help or may not. But when we serve them we experience inward peace and happiness; about this there is no doubt. What is called “Paropakaram” (helping others) is indeed upakara done to oneself (helping oneself). – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

Leave a Reply

%d