மஹாப் பிரளயத்தில் ஸகல ஜீவராசிகளும்தான் – அநுஷ்டானமே செய்யாதவர்களும், புழு பூச்சியும் கூடத்தான் – பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். அப்படியிருக்க இத்தனை அநுஷ்டானங்களைச் செய்த இவனுக்கும் அந்த நிலை கிடைத்ததில் விசேஷம் என்னவென்றால், ஒரு விசேஷம் இருக்கிறது. மறுபடியும் அகண்ட வெளியிலிருந்து பரமாத்மா ஸகுண ஈச்வரனாகி லோகங்களை ஸ்ருஷ்டித்து, ஜகத் வியாபாரங்களை ஆரம்பித்து விடுவார். அப்போது அநுஷ்டானம் பண்ணாத மற்ற ஜீவர்களும், இதர உயிரினங்களும் பூர்வ கர்மாப்படி மறுபடி பிறந்துதான் ஆகவேண்டும். அதுவரை பரமாத்மாவில் அவை இரண்டற கரையாமல் லயித்துத்தான் இருந்திருக்கும். இப்போது லயம் விலகி மறுபடி ஜன்மா உண்டாகிவிடும். ஸம்ஸ்காரங்களைச் செவ்வேனே செய்து சுத்தியானவனோ இப்படி புனரபி ஜனனம் என்று மறு ஸ்ருஷ்டியின்போது பூமியில் வந்து விழாமல், பரமாத்மாவோடு பரமாத்மாவாக இரண்டறக் கரைந்தது கரைந்தபடியே இருப்பான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
In the great deluge all creatures-even those who have not performed any of the prescribed rituals, creatures like worms, reptiles, and so on also -will merge with the Paramatman. Then what is special about the one who unites with the Supreme Being after having performed all the Anushtanams/Samskaras? When the Paramatman, as the Esvara with attributes, creates the worlds again those who did not perform the Samskaras will be born again according to the Karma of their past lives. Only those who have properly gone through the Anushtanams /Samskaras and been rendered pure will be inseparably united with the Brahman. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam