Mrs. Gemini Ganesan – Don’t Give Now!

Chennai: 14/05/2011: The Hindu: Friday Page: Eyes that reflects Compassion of the Heart - Sri Mahaswami During the Vijaya Yatra - 1983.

Jaya Jaya Shankara Hara Hara Shankara – An incident where Sri Periyava showers his Anugraham through Mrs. Gemini Ganesan to a poor brahmin. Thanks to our Sathsang seva member Shri M Venkataraman for the translation. Ram Ram

இப்போ குடுக்காதே!

உகார்குர்துவில் பெரியவா முகாம். நடிகர் ஜெமினிகணேஸனின் மனைவி பாப்ஜி பெரியவாளை தர்ஶனம் பண்ணவந்தாள். அந்தஸமயத்தில், அந்த க்ராமத்தை சேர்ந்த ஓர் ஏழை ப்ராஹ்மணர் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து நமஸ்காரம் பண்ணினார்.

“பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு….பெரியவா க்ருபை பண்ணணும்…த்ரவ்ய ஸஹாயம் பண்ணி அனுக்ரஹம் பண்ணணும்”…

பெரியவா டக்கென அங்கு நின்று கொண்டிருந்த பாப்ஜியிடம் “ஒங்கிட்ட ஏதாவது இருந்தா குடேன்”

உடனே அவள் தன் கையில் அணிந்திருந்த வளையல்களில் ஒரு ஜோடியை கழற்றி ஸந்தோஷமாக கொடுத்தாள்.

“இரு !இரு ! இப்போ குடுக்காதே! அவர் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு நா முன்னால குடுத்தா போறும்”

ஏன்இப்படிசொல்கிறார்? அதோடு நிற்கவில்லை, நம் ஞான ஸம்ஸாரி….அங்கே வந்திருந்த உள்ளூர் பாங்க் மானேஜரிடம் “இந்தா….இந்த வளையலை ஒங்க பாங்க் லாக்கர்ல வெச்சுக்கோ. அப்றமா குடுக்கலாம்” என்றார்.

ரெண்டு நாள் கழித்து அந்த ப்ராஹ்மணர் வந்து ஒரேயடியாக அழுதார்.

” க்ருஹத்ல எல்லா ஸாமானும் திருடு போய்டுத்து. பொண்ணுக்கு எப்டி கல்யாணம் பண்ணுவேன்….பெரியவாதான் கதி!…”

” எது போகணுமோ அதான் போச்சு! கவலப்படாதே!….கல்யாணம் நன்னா நடக்கும்”
மிஞ்சியிருந்த ஸொத்து பாப்ஜி குடுத்த வளையல்கள்தான்!

“பெரியவா அனுக்ரஹம், வளையலாவது தப்பிச்சுது…….”

பெரியவா சிரித்துக் கொண்டே “தலைக்கு வந்தது தலைப்பாவோடபோச்சு போ! இந்த வளையல வெச்சு கல்யாணத்தை பண்ணு. அமோஹமா இரு!”

ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். அன்றைய தேதிக்குஅந்த வளையல்கள் 20,000 ரூவாய் மதிப்பு!

இதில் சில பேருக்கு ஒரு கேள்வி எழும்.

ஏன்? பெரியவா நெனச்சா, திருட்டு போகாம பண்ணியோ, இல்லாட்டா அவரை caution பண்ணியோ இருந்திருக்கலாமே! என்று கேட்கத் தோன்றும்.

நம்முடைய ப்ராரப்தத்தை மஹான்கள் மாற்றமாட்டார்கள். நம்முடைய கர்மாவை, நல்லதோ, கெட்டதோ, அனுபவிச்சுத்தான் கழிக்கணும். ஆனால், ஒரு மஹாத்மாவை ஆஶ்ரயிக்கும்போது, அந்த ப்ராரப்தம் நம்மை ரொம்ப பாதிக்காதபடி பண்ணி அனுக்ரஹம் பண்ணி விடுவார்கள்.

எந்தக் கஷ்டமும், நமக்கு கஷ்டமாகத் தெரியாது. நாம் இன்னும் பெரியவாளை இறுகப் பிடிக்கப் பிடிக்க, நம்மை பிடிக்கும்கஷ்டங்களுக்கே கஷ்டம் வந்து விடும்!

Don’t Give Now

Maha Periyavaa had camped at Ugar Khurd in Karnataka. Mrs. Babji, wife of actor Gemini Ganesan came to have darshan of Periyavaa. At that time a poor Brahmin  came with his daughter and did namaskaram to Periyavaa.

The Brahmin said “My daughter’s marriage has been fixed. I seek Periyavaa’s blessing. I request Periyavaa to help me financially also.”

Periyavaa immediately turned to Babji and said “Give something you have to this Brahmin.”

She immediately took a pair of gold bangles, which she was wearing, and offered them with lot of joy.

Periyavaa said “Wait. Don’t give now. It is enough if these bangles are given four days before his daughter’s wedding.”

Why did Periyavaa say so? Further he told the local Bank Manager, who was present. “Keep these bangles in the locker of your bank. You can give them to the Brahmin later.”

After two days the poor Brahmin came crying to Periyavaa. “Most of my belongings at home have been stolen. How will I conduct marriage of my daughter? Periyavaa is my only hope.”

Periyavaa said “Don’t worry. Only what is destined to go has gone. But marriage of your daughter will be conducted well.”

The poor Brahmin said “I am left with only bangles gifted by Mrs. Babji. By grace of Periyavaa these bangles escaped.”

Periyavaa smilingly said “Thalaiku vandhadhu thalaipaavoda pochu. Using these bangles go and organize marriage of your daughter.”

Periyavaa gave him prasadam and blessed him. The value of bangles, in those days, was Rs 20,000 which was a big sum of money.

Following questions may arise in our minds. Could Periyavaa not prevented the theft, if he wanted? Could he have at least cautioned the Brahmin?

Mahaans will not change our Prarabhdam ( punyam/ paapam of our past janmaas fructifying in this janmaa according to Law of karma). Every jiva has to experience the consequences of past karmas – good or bad.

But Mahatmas will bless us such that the impact of our past karmas is not severe. With blessings of Mahatmas even difficulties which come our way will not appear to be difficulties. As our devotion to Periyavaa increases difficulties that come to us will face difficulty.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. baghavanukku theriyum yarukku, yeppo, enna koduthu kaathu ras.

    hikka vendum endru. kai vidamattan kanaga sabesan perivah u r guiding me ungal thirivadiea GATHI

    v.subhurayen COIMBATORE

  2. அருமையாக இருக்கின்றது

Leave a Reply

%d bloggers like this: