ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே கடைசி வரை எல்லா ஸம்ஸ்காரங்களையும் அஷ்ட குணங்களையும் அநுஷ்டித்தவனின் கதை என்ன? செத்துப் போன பின் அவன் கதி என்ன? இவனுக்குத்தானே தஹனம் சொல்லியிருக்கிறது? லோகத்தில் பொதுவாக ரொம்ப ஜாஸ்தி இருக்கிறவனும் இவன்தானே? இவன் செத்தபின் என்ன ஆகிறான்? ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் இவன் பரமாத்ம தத்வத்தோடு அத்வைதமாகக் கரைந்து விடுகிறான் என்று சொல்லவில்லை. கடைசி வரையில் எல்லாவற்றையும் விட்டு, பரமாத்மா ஒன்றையே பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பெரிய தாபமாக இவனுக்கு வரத்தானே இல்லை? அது வந்துவிட்டால் யாரும் பிடித்து வைக்க முடியாது. அது வராததால் தான் இவன் ஸந்நியாஸியாக ஓடவில்லை. ஆகையால் இவன் அத்வைத முக்தி அடைவதில்லை. ஆனாலும் சாஸ்திரத்தை நம்பி அதன்படியே கர்மாக்களைப் பண்ணி சித்தத்தை நன்றாக சுத்தம் பண்ணி, லோக க்ஷேமத்தையும் உண்டாக்கியிருக்கிறானல்லவா? அதனால் இவன் குணமும் குறியுமில்லாத பரமாத்மாவுடன் ஒன்றாகாவிட்டாலும், அதே பரமாத்மா குணம் குறிகளோடுகூட லோகங்களை நிர்வகிக்கிற ஈச்வரனாக இருக்கிற பரம உத்தமமான ஸந்நிதானத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்ப ஸ்தானம் என்று அது சொல்லப்படுகிறது. பிரம்ம லோகம் என்பது அதுதான். பரமாத்மாவிலேயே கரைந்து ஒன்றாகிவிடாமல், வெளியே இருந்து கொண்டிருந்தாலும்கூட, அவரை ஸதாவும் அநுபவித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்தானத்தில்கூட எப்போதும் ஆனந்தமாகவே இருக்கும். ஒரு குறையும் இருக்காது. அப்படியானால் இதையும் மோட்சம் என்று சொல்ல வேண்டியதுதான். ஒரு குறையில்லை, ஒரு துக்கம் இல்லை, எப்போதும் ஈச்வர ஸாந்நித்யம். இதற்கு மேல் என்ன வேண்டும்? இப்படிப்பட்ட நிலையைத்தான் எல்லா ஸம்ஸ்காரங்களையும் செய்துவிட்டு ஸந்நியாஸியாகாமலே இறந்தவன் அடைகிறான். அவன் இதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டான். ஆனாலும் அந்த ஈச்வரன் தானும் ஒரு காலத்தில் இந்த லோக வியாபாரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, லோகங்களையெல்லாம் மஹாப் பிரளயத்தில் கரைத்துவிட்டு, குணம் குறியில்லாத பரமாத்ம ஸத்யமாக மட்டுமே ஆகிவிடுவான். அப்போது அதுவரை அவனுடைய ஸந்நிதானத்திலிருந்த ஜீவர்களும் அவனோடுகூடப் பரமாத்மாவோடு பரமாத்மாவாக அத்வைத முக்தி அடைந்து விடுவார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
What is the fate of the man who does not become an ascetic but who keeps performing, until his death, all the samskaras and cultivates the eight Aathmic qualities? He is cremated on his death, is he not? After all, the majority of people belong to this category. What happens to such people after their death? Sri Shankara does not state that they will dissolve in Ultimate Reality. They do not have the intense urge, the burning desire, to grasp the Brahman, abandoning everything. If they have the all-consuming desire for the Truth, no force can hold them back from their quest. It is because they do not possess such a desire that they do not obtain non-dualistic release. However, they have faith in the Sastras and perform works according to them and contribute to the well-being of the mankind and they are also thereby rendered pure inwardly. So, though they are not united with the Paramatman, they go to the presence of Eshwara, Eshwara who is the Paramatman with attributes (Saguna Brahman) and is behind the affairs of the world. This is called “Hiranyagarbha-Sthaana” and it is the same as Brahmalokha. In this there is no inseparable dissolution in the Paramatman, but the man who attains it remains in bliss “experiencing” Eswara. Such a state is also to be described as Moksha. There is nothing wanting, there is no sorrow, and there is the presence of the Lord. What more is wanted? This state is reached by those who perform all the samskaras even though they do not become ascetics. But one day Eswara (the Saguna Brahman) will put a stop to the activities of all worlds and dissolve them in the great deluge (maha-pralaya). He will now become the Nirguna Brahman, the Paramatman without any attributes. At this time all those who reside by his side will unite with the Paramatman as the Paramatman, which is non-dualistic liberation. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
The related link
https://www.youtube.com/watch?v=t-NrmV3z_g0
Song by Sri Maha Kavi Bharathiyar and sung by Sri Maharajapuram Santhanam
“sinthai thelivakku alall ithai settha udalakku”
ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam
ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam
nanri.
2016-03-25 9:28 GMT+05:30 Sage of Kanchi :
> Sai Srinivasan posted: ” ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே கடைசி வரை எல்லா
> ஸம்ஸ்காரங்களையும் அஷ்ட குணங்களையும் அநுஷ்டித்தவனின் கதை என்ன? செத்துப் போன
> பின் அவன் கதி என்ன? இவனுக்குத்தானே தஹனம் சொல்லியிருக்கிறது? லோகத்தில்
> பொதுவாக ரொம்ப ஜாஸ்தி இருக்கிறவனும் இவன்தானே? இவன் செத்தபின் ”
>