Jaya Jaya Shankara Hara Hara Shankara – A very nice Sri Periyava Kavasam. Thanks to Whatsapp for the share. Ram Ram
நினைப்பவர் நினையாதார் உள்ளத்திலும் எண்ணத்திலும் நிற்கும் தெய்வம் நீரல்லவா
என்றென்றும் எனை இயக்கும் உயரிய பெரும் சக்தி உமது கருணையல்லவா!
எனை ஈன்ற தாயாக தந்தையாக குருவாக இருப்பதும் நீரல்லவா!
அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற குருநாதன் நீரல்லவா!
பொருள் யாவும் சேர புகழ் எங்கும் ஓங்க செய்வதுமும் செயலல்லவா!
இருள் யாவும் விலக மருள் எல்லாம் நீங்க வைப்பதுமும் அருள் அல்லவா!
நினைப்பவர் நினையாதார் உள்ளத்திலும் எண்ணத்திலும் நிற்கும் கண் கண்ட நடமாடும் தெய்வம் நீரல்லவா!
நடமாடும் தெய்வமென வந்த மா முனியே
உடன் கூட வருகின்ற என் தாயே..
தொடர்ந்தே நான் உனைப் பாட அருள் தருவாய்
விரைந்தே உன் பதம் தந்து அருளிடுவாய்
தாய் தந்தையுடன் தரணிதனை காக்க
துளசி மாலை சூடி துயர் துடைக்க வந்தீரோ!
விபூதி குங்குமத்துடன் ருத்ராஷம் அணிந்து
வீதி உலா வந்தீரோ எம் காஞ்சி மகானே!
நம் எளிய வாழ்வுக்கு என்றும் துணை வரும் காஞ்சீ மகா ஜகத்குரு
கவசம் கவசம் கவசம் உம் நாமம் காஞ்சீ மகா ஜகத்குரு
உரைத்தால் கவசமாய் காக்கும் எந்நாளும் காஞ்சீ மகா ஜகத்குரு
சரணம் சரணம் சரணம் உம் பாதம் காஞ்சீ மகா ஜகத்குரு
சரணம் தந்திடும் துணை வரும் எந்நாளும் காஞ்சீ மகா ஜகத்குரு
எங்கெங்கே நான் இருந்திடும் போதிலும் காஞ்சீ மகா ஜகத்குரு
மறுநொடி நடப்பது இந்நொடி அறியேன் காஞ்சீ மகா ஜகத்குரு
மறுநாள் எப்படி நான் இங்கு சொல்வேன் காஞ்சீ மகா ஜகத்குரு
வருவன எல்லாம் நல்லவை ஆக காஞ்சீ மகா ஜகத்குரு
மனதினில் நினைப்பேன் உம் நாமம் உரைப்பேன்
வழித் துணையாக வருவாய் நீயும் காஞ்சீ மகா ஜகத்குரு
விழிகளில் வைத்தே காப்பாய் நாளும் காஞ்சீ மகா ஜகத்குரு
அழித்திடுவாயே என் வினை நீயும் காஞ்சீ மகா ஜகத்குரு
கழித்திடுவேனே உன்னை எண்ணி நானும் உரைப்பேன் உரைப்பேன் உன் திரு நாமம்
உருகியே அழைப்பேன் உன்னை எந்நாளும் கவசமாய் காத்திட விரைந்தே வருவாய்
காவலாய் இருந்தே நல்வழி தந்திடுவாய் காஞ்சீ மகா ஜகத்குரு!
தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா திருவடி போற்றி!
Courtesy: HINDUISM
Categories: Krithis
kindly write this in english
Very great krithi on periyava.
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!