Periyava Golden Quotes-155

Periyava_walking_logo

 

ஆபஸ்தம்ப ரிஷி தம்முடைய தர்ம சாஸ்திரத்தின் முடிவில் “நான் இதில் சொன்னதோடு எல்லா விதிகளும் முடிந்துவிட்டன என்று அர்த்தம் இல்லை. இன்னம் அநேகம் உள்ளன. அவை குலப் பழக்கத்தாலும், பிரதேசப் பழக்கத்தாலும் [தேசாதாரத்தாலும்] ஏற்பட்டிருப்பவை. இவற்றை ஸ்திரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணப் பொது ஜனங்களிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு அநுஷ்டியுங்கள்” என்று சொல்லியிருப்பது வாஸ்தவம்தான், ஆனால் இப்படி சொன்னவை, அவர் தர்ம சாஸ்திரத்தில் சொன்னதற்கு அதிகப்படியாக (additional -ஆக) ஜனங்களின் பழக்கத்தில் வந்தவற்றைத்தான் குறிப்பிடுமே ஒழிய, அவர் சொன்னதற்கு முரணாக (contrary-ஆக) உள்ள பழக்கங்களையல்ல. அதாவது சாஸ்திரத்தில் இருப்பனவற்றோடுகூட, அவற்றுக்கு முரணில்லாத குலாசார, தேசாசாரங்களையும் பின்பற்ற வேண்டுமே ஒழிய, சாஸ்திரப் பிரமாணத்தை விட்டுவிட்டு, அதற்கு மாறுதலாக ஏற்பட்டு விட்ட பழக்கங்களைக் கடைபிடிப்பது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Let us quote here what Apasthamba Maharishi says concluding his Dharma Sastra: “What I have dealt with so far does not exhaust all the rules. There are still many more. These must have evolved according to the custom of the family or the region concerned and may be known from women and members of the fourth Varna…” We must, however, remember that Apasthamba Maharishi does not want us to go against the Dharma Sastras. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply

%d bloggers like this: