ஒரு வேடிக்கை, அல்லது பெரிய கஷ்டம், தர்ம சாஸ்திரங்களில், ஸூத்ரங்களில் சொல்லியுள்ள ரூல்களை மனம் போனபடி மீறுகிறபோதே, அங்கங்கே எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்ட சில விஷயங்களைப் பெரிய சாஸ்திர ரூல் மாதிரி நினைத்துக் கொண்டு அநுஸரித்து வருகிறார்கள். உதாரணமாக அக்காள் கல்யாணத்துக்கு இருக்கும் போது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது; ஒரே ஸமயத்தில் மூன்று பிரம்மச்சாரிகள் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது என்கிறது போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டு, பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயன ஸம்ஸ்காரம் செய்விக்காமல் இருக்கிறார்கள். ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வயசு வரம்பை இம்மாதிரி லெளகிகமான வழக்கங்களை முன்னிட்டு மீறுவது ஸரியல்ல. இம்மாதிரி வழக்கங்கள் லெளகிகமான ஸெளகரியத்தை முன்னிட்டோ, ஸென்டிமென்ட் என்கிறார்களே, அந்த மன உணர்ச்சியை முன்னிட்டோ தான் ஏற்பட்டிருக்கக் கூடும். தர்ம சாஸ்திரத்தை மீறாமல் இவற்றையும் கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் ஆதாரமான ரூலை மீறி இவற்றையே பெரிய சாஸ்திரமாக நினைத்து அனுஸரிப்பது அயுக்தமானது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It is to be regretted that, while the rules and injunctions of Dharma Sastras are conveniently disregarded, certain customs prevalent in this part or that part of the country are being followed as if they had Sastric validity. For instance, the belief has gained ground that the upanayana of a son must not be performed if he has an elder sister yet to be married. Another belief is that three brahmacarins must not stay together in a family at the same time. The upanayana of boys is delayed on this pretext. It is not right to go against the Dharma Sastras in preference to such customs and disregard the upper age limit fixed by them for the upanayana samskara. The customs mentioned above must have originated as a matter of convenience or for some sentimental reason. Popular practices may be followed so long as they are not contrary to the dictates of the Dharma Sastras. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply