Boundless is his Play!


45 Mahaperiyava Smiling During Anushtanam 20112014

Jaya Jaya Shankara – Absolute delight to read and enjoy. Whoever did the Tamizh typing let me know so I can give credit. Thanks to Smt. Hema Sugumaran our Sathsang team seva member for the translation. Ram Ram


அலகிலா விளையாட்டுடையான்!

கட்டுரையாளர் :திரு. கணேச சர்மா மாமா அவர்கள்

குஜராத்தில் வசித்து வந்த ஒரு தம்பதியர் சிறந்த பக்தர்கள். ஒருநாள் விடியற்காலை  எழுந்த அந்தப்  பெண்மணி தன் கணவரை எழுப்பி,, ஒரு பிரபல குஜராத்தி தினசரி பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி உடனே கடைக்குச் சென்று அதை வாங்கி வரும்படி வற்புறுத்தினாள். பத்திரிக்கை படிக்கும் வழக்கமில்லாதவள் இன்று அதிசயமாகக் கேட்பதால் காரணம் புரியாமல் கணவர், ‘எதற்காக அந்தப் பத்திரிக்கையை வாங்கி வரச் சொல்கிறாய்?’ என்று கேட்க அவளோ ‘முதலில் பத்திரிக்கையை வாங்கி வாருங்கள். பிறகு விவரம் சொல்கிறேன்’ என்றாள்.

வேறுவழியின்றி அவர் பத்திரிக்கையை வாங்கி வந்தார். பரபரப்புடன் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்த அவள், ஒரு பக்கத்தில் வந்திருந்த முழுப்பக்க விளம்பரத்தையும் அதில் உள்ள புகைப்படத்தில் இருந்த உருவத்தையும் காட்டி, ‘இவர்தான்’, ‘இவர்தான்’ எனக் கூச்சலிட்டு கணவரிடம் ‘ இவரை உடனே நேரில் போய்ப் பார்க்க வேண்டும். எங்கு இருக்கிறார் என்று விலாசம் கேட்டு வாங்கி அவரைச் சென்று பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உணர்ச்சிவசப்பட்டவளாய் சொன்னாள்.

ஆச்சரியமடைந்த அவர் ‘ஏன், எதற்கு, என்ன நிகழ்ந்தது?’ என்று மனைவியிடம் கேட்டார். அவள் ‘பின்னிரவில் நான் ஒரு கனவு கண்டேன். நான் வீட்டு வாயிலில் இருக்க, ஒரு சந்நியாசி காவி உடையுடன் அங்கு வந்து நின்றார். அவரைப் பார்த்து நான் பிரமித்து நின்றேன். அவரை உள்ளே வரும்படி அழைத்து, ஆசனத்தில் அமருமாறு கேட்டுக் கொண்டேன். ஆசனத்தில் அமர்ந்த அவர் ‘நீதான் என்னை வந்து பார்க்கவில்லை. நானாவது உன்னைப் பார்க்கலாம் என்று வந்தேன்’ என்று கூறினார். ‘ஸ்வாமி இது என்ன குற்றச்சாட்டு? நீங்கள் யார்…. எங்கு இருக்கிறீர்கள்….என்றே எனக்குத் தெரியாது. அப்படியிருக்க வந்து பார்க்கவில்லை என்று எப்படி குற்றம் சொல்லலாம்?’ என்று கேட்டேன். நான் யாரென்று தெரிய வேண்டுமா?. நாளை காலை (ஒரு குறிப்பிட்ட தினசரி பத்திரிக்கையின் பெயரைச்சொல்லி) தினசரி பத்திரிக்கையை வாங்கிப் பார் என்று சொன்னார். உடனே நான் கண்ட கனவு கலைந்து விட்டது. கனவில் வந்தவர் யாரென்று  தெரிந்து கொள்ளும் ஆவலில்தான் உங்களை அந்த தினசரிப் பத்திரிக்கையை வாங்கி வரச்  சொன்னேன்’ என்றாள்.

பத்திரிக்கையில் வந்திருந்த விளம்பரத்தில் மஹா பெரியவாள் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கரையில் ஆதிசங்கரருக்கு பெரிய மண்டபம் எழுப்பி, அதில் சங்கரர் திருஉருவச்சிலையைப் ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய இருக்கும் விவரம் இருந்தது. மேலும் மஹாபெரியவர் நின்று கொண்டிருக்கும் படமும் வந்திருந்தது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் அந்த மாதரசி ‘தன் கனவில் வந்தவர் இவரே’ என்று தன் கணவரிடம் கூறி உடனே  அவரைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி வேண்டினாள்.

இவை அனைத்தையும் கேட்ட பிறகு கணவர் மெதுவாக ‘எனக்கும் இதே போல் கனவு வந்தது. ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ என்றார். இதைக் கேட்டு மேலும் ஆச்சர்யம் அடைந்த அவள், ‘இதைக் கனவு என்று அசட்டை செய்யக் கூடாது. உடனே பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினாள். பிறகு இருவரும் சென்னை வந்து விசாரித்துக் கொண்டு இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்த பெரியவாளைத் தரிசிக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற நேரம் மதியம் ஆகி விட பெரியவாள் பூஜை முடிந்து, பிக்ஷை முடிந்து ஓய்வெடுக்கச் சென்று விட்டார். வந்த தம்பதிகள் அங்கிருந்தவர்களிடம் ‘வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் உணவு அருந்தவில்லை. பெரியவாளைத் தரிசனம் செய்த பிறகே உணவு உட்கொள்ளச் சங்கல்பம்’ என்று தெரிவித்தார்கள்.

இந்த விஷயம் நடமாடும் தெய்வம் காதிற்கு எட்ட உடனே எழுந்து அங்கு வந்தார்.  மஹானைப் பார்த்த தம்பதிகள் உணர்ச்சி வசப்பட்டனர்.  கனவில் கண்ட திரு உருவை நேரில் கண்டதும் எப்படி இருக்கும் உணர்ச்சி!  மெல்ல அவர்களிடம் குசலம் விசாரித்து விட்டு, எல்லா விவரமும் கேட்டறிந்து கொண்ட மஹான் ‘நான் கனவில் வந்து அழைத்தேனா? என்று ஒன்றும் அறியாதவர் போல் நாடகமாடி விட்டு, ‘சரி என்றைக்குக் கனவு வந்தது… என்ன கனவு கண்டாய்? என்று கேட்டார். அவர்களால் கனவு கண்ட நாளை சரியாக நினைவுபடுத்திக் கூற இயலவில்லை. ஆனால் மஹாப்பிரபுவோ மெல்ல மெல்ல  புதிரை அவிழ்ப்பது போல் ‘பௌர்ணமியாய் இருக்குமோ’ என்று வினவினார். உடனே அந்த மாதரசி ‘ஆமாம்’ என்றாள். முதலில் ஞாபகம் வராதவருக்கு பெரியவா குறிப்பு கொடுத்ததும் எப்படி ஞாபகம் வந்திருக்கும்! அதற்கு விடை அவளே மொழிந்தாள். ‘கனவு கண்ட நாள் பௌர்ணமியாகத்தான் இருக்க வேண்டும். காரணம் நாங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த சத்யநாராயண பூஜைக்குச் சென்றிருந்தோம்’ என்று உறுதி செய்தாள்.

இதிலிருந்து தெரிவது என்ன? கனவில் சென்று அழைத்து அருள் செய்வது மட்டுமின்றி, நாள் முதற்கொண்டு சுட்டிக் காட்டியதால், அது வெறும் கனவல்ல, நிஜமே என்று புரிகிறது.

பெரியவா சரணம்.

Boundless is his Play

Article by Shri Ganesha Sarma

A pious couple were living in Gujarat. One day at early hours, the lady woke up her husband and pressurized him to get a famous Gujarathi daily paper immediately. Since she has no reading habits, the husband wondered “why’. She said, “ First you get me the paper, then I shall tell you the reason”. Having no option, he got it for her. She hurriedly opened a page and showed the photo of a person in a full page advertisement and exclaimed, “ It is He, it is He, find out his whereabouts and arrange to meet him immediately,” with overwhelming emotion.

“Why, What happened” asked the surprised husband. The wife said,” In late night I had a dream. An ascetic in orange robe came and halted at our entrance while I was standing there. I was astonished and invited him to come inside and be seated. He sat and told me, “ Since you did not come to see me, I thought at least let me come.” I asked, “Swami, when I don’t even know who are you and where are you, how can I be blamed for not coming?

If you want to know who I am, then tomorrow morning (he mentioned the name of the popular daily paper) get the paper and see , said He and my dream ended. So out of curiosity to know who had appeared in my dream, I made you buy the daily paper.”

The advertisement in the paper carried the information about the Kumbabishekam (consecration) of a big mandap for Shri Adishankara built on the banks of Agnithirtha at Rameshwaram and installation  of  Shri Shankara’s statue to be performed by Maha Periyava.  Also it contained the photo of Maha Periyava in standing pose.  Looking at the photo the great lady confirmed to her husband that He was the one who had appeared in her dream and requested to arrange to meet Him immediately.

After listening to her narration, the husband said quietly ,” Even I got a similar dream. But I did not attach any importance.”  Hearing this with added surprise she  said, “we must not ignore it as just a dream. Make immediate arrangements for travel.” Both on reaching Chennai proceeded to Ilayathankudi to have Periyava”s darshan on learning that He was camping there. Since they reached by afternoon, Periyava was resting after the Pooja and Bhiksha was done.

The couple told the people over there that right from the time they left the house, they have not taken any food as they had a firm resolution to eat only after the Darshan of Periyava.

This reached the ears of the living God who immediately got up and came to them. On seeing Him, the couple were overwhelmed with emotions. How emotional it would have been to see the great being in person who appeared in their dream! He softly inquired and got all the details. “Did I call you in dream” said He in a playful pretense . “Ok, when did you get the dream. .what dream it was…? asked He .They were unable to recollect the day of the dream. Then the Mahaprabhu like trying to slowly solve a puzzle questioned,” could it be a Pournami  (full moon day).  At once the great lady answered in affirmative. How could she who had totally forgotten the day recollect now after receiving the clue from Periyava?  She explained “It has got to be Pournami because that day we attended Sathya Narayana Pooja held at one of our friend’s house.

What do we learn from this? Since even the day of the dream got pointed out, the grace is not limited to a dream, it is real.

Periyava Saranam

 



Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. Only few are lucky in the world… We can only pray for luck… jaya jaya shankara hara hara shankara

  2. Amazing and nice to read it. Both of them are so blessed to the same dream. So much of grace for them.

    You also are so lucky Ms Shubha.

  3. Today morning just before I woke I had a Darshan of Mahaperiyava standing in my dream and now to read this is pure Ananda. Ofcourse theirs was a truly highly spiritual experience !

  4. What a divine play! Charanam sharanam

  5. Goosebumps n tears, what more can one ask for? APARA KARUNA SINDHU Mahaperiyava Sharanam!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: