Jaya Jaya Shankara Hara Hara Shankara,
An incident that shows how Guru Darisanam has the power to destroy so many doshams. Thanks to our Sathsang volunteer team member Smt. Radhika Suresh for the translation. Ram Ram
அகர்வால் கதை.
By Sri. ஸ்ரீ பரணீதரன்
Tamizh Typing – Sri Varagoor Narayanan.
பம்பாயில் அவர் பெரிய தொழிலதிபர்.பெயர் அகர்வால். அவருக்கு மூன்று பெண்கள். எத்தனை முயன்றும் மூத்தவளுக்கு வரன் குதிரவில்லை. அடுத்தவளுக்கு மாப்பிள்ளை கிடைத்ததால், முதலில் அவளுக்கு திருமணம் செய்துவிடலாம் என்று எண்ணினார்.
ஆனால் மூத்தவளின் மனம் துன்பப்படுமே என்று தயங்கினார். அதையறிந்த அவள், என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் அப்பா, தங்கைக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்தை நடத்தி விடுங்கள்” என்று ஆறுதல் சொன்னாள்.
அதன் பிறகும் அவர் மனம் சமாதானமடையவில்லை. ஏராளமான செல்வம் இருந்தும் பெண்கள் கல்யாணம் இருந்தும் பெண்கள் கல்யாணம் தட்டிக் கொண்டே போகிறதே என்று மனம் புழுங்கினார்.
என் உறவினர் ஒருவர் [பரணீதரன் சொல்லிக் கொண்டிருக்கிறார்]. அகர்வாலுக்கு நெருங்கிய நண்பர். ஒரு நாள் தம் உள்ளக் குமுறலை நண்பரிடம் வெளியிட்டார்.
அகர்வால். ஸ்ரீ காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து ஆசி பெறலாம் என்று கூறியிருக்கிறார் நண்பர்.
சுவாமிகளைப் பற்றி அகர்வால் கேள்விப்பட்டிருக்கிறார். தரிசித்ததில்லை. காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் செல்லும்படி அன்பரிடம் வேண்டிக் கொண்டார்.
குடும்பத்தோடு சென்னைக்கு வந்த தொழிலதிபரை எனக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அவர்களுடன் காஞ்சிபுரம் வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்து வைக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்.
நான் உடன் சென்றேன் பெரியவாளிடம் அகர்வாலைப் பற்றிக் கூறி குடும்பத்தோடு அவர் தரிசனத்துக்கு வந்துள்ள காரணத்தையும் எடுத்துரைத்தேன்.
பின்புறம் ஓரிடத்தைக் குறிப்பிட்டு அவர்களை அங்கு அமரச் செய்யும்படி கூறினார் பெரியவா. அவர்களை அவ்விடத்துக்கு அழைத்துச் சென்றேன். சற்றைக்கெல்லாம் பெரியவா அங்கு வந்தார்.
அகர்வால் தம்மைப்பற்றிக் கூறி விட்டு தம் குடும்பத்தினர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவிட்டு, பெண்களுக்குக் கல்யாணம் நடைபெற ஆசி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அகர்வாலிடம் பெரியவா பேசிவிட்டு, அவர்களுக்கு உத்தரவு கொடுத்து அனுப்பும் முன்னர், எதிரில் நின்றிருந்த இரு பெண்களிடம் ஆளுக்கொரு பழத்தை எடுத்துக் கொடுத்தார்.
“மூணு பெண்கள்னு சொன்னாறே, இன்னொருத்தி எங்கேடா?” என்று என்னிடம் கேட்டார்.
அந்தப் பெண் சற்று நாணத்துடன் தந்தைக்குப் பின்னால் மறைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
“சுவாமிகள் உங்களை அழைக்கிறார், முன்னால் வந்து நில்லுங்கள்” என்று ஆங்கிலத்தில் கூறினேன். வந்து நின்றாள். மூன்றாவது பழத்தை எடுத்து அவளுக்கு அளித்தார் பெரியவா. அவள்தான் மூத்தவள் என்று பின்னர் அறிந்தேன்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் என் உறவினரை சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பின்னர் சந்தித்தபோது, பம்பாய் தொழிலதிபர் குடும்பத்தோடு ஸ்வாமிகளைத் தரிசித்த நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சு வந்தது.
“அந்தப் பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று விசாரித்தேன்.
அது ஒரு பெரிய ஆச்சரியம்” என்று கூறத் தொடங்கியவர் முழு விவரங்களையும் உற்சாகத்துடன் விவரித்தார்.
முதலில் இரண்டாவது பெண்ணுக்குத்தான் கல்யாணம் நிச்சயமாயிற்றாம். நல்ல இடம்,செல்வம் செழிக்கும் குடும்பம், முகூர்த்தம் வைத்து, பத்திரிகை கூட அச்சடித்தாகிவிட்டது. மூத்த பெண் வருத்தப்படவில்லை என்றாலும், பெற்றோருக்கு உள்ளூர மனவேதனை இருந்ததாம். ஒரு குறையுடன் தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர்.
திடீரென்று ஒரு கோடீஸ்வரரின் மகன் மூத்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முன் வந்திருக்கிறான். பெண்ணுக்கும் அவனைப் பிடித்துவிட்டது. இரு தரப்பினருக்கும் பூரண சம்மதம். நிச்சயம் செய்துவிட்டு முகூர்த்தம் வைக்க நாள் பார்த்தபோது, ஒரு நல்ல நாள் இருந்தது.அது இரண்டாவது பெண்ணின் திருமணத்துக்காகக் குறிக்கப்பட்ட முகூர்த்தத்துக்கு முன் முகூர்த்தமாகவே அமைந்தது. ஏற்பாடுகள் ‘ஜெட்’ வேகத்தில் நடைபெற்றன. மூத்தவளின் திருமணம் முதலில் முடிந்து, இரண்டாவது பெண்ணின் திருமணம் பின்னரே நடைபெறும்படி திடீர்த் திருப்பம் ஏற்பட்டதில் அகர்வால் குடும்பத்தினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சில மாதங்களில் மூன்றாவது மகளின் திருமணத்தையும் நிச்சயம் செய்து கோலாகலமாக நடத்தி வைத்துவிட்டாராம் அந்தப் புண்ணியவான்.
The Story of Agarwal
Mr.Agarwal was quiet a well known Businessman in Mumbai. He had three daughters. Despite so much of efforts he did not get a suitable alliance for his eldest daughter. Since an apt groom came in for his second daughter he thought of conducting her marriage first but had a consideration on the feelings of the elder. She understood it and told her father not to worry about her and asked him to go ahead with the marriage of her sister. But Mr.Agarwal did not convince. He was very disheartened thinking in spite of being so wealthy the wedding of his daughters is getting so delayed.
One of my relative was a close friend of Mr.Agarwal. Mr.Agarwal has shared his grievance with this friend one day. The friend advised Mr.Agarwal to have the Darshan of Maha Periyavaa and take his blessing. Mr.Agarwal has heard about Kanchi Maha Swamigal but has not had his Darshan so far. Mr.Agarwal requested his friend to take him to Kanchipuram.
My friend introduced the Businessman and his family to me, who had come to Chennai, and asked me to take them to Kanchipuram and arrange for the Darshan of Mahaswamigal. I accompanied them to Kanchipuram. I explained to Swamigal about Mr.Agarwal and the purpose of his visit along with his family. Periyavaa spotted a place at the backside and told them to be seated there. I took them to that place. Periyavaa came there in sometime. Mr.Agarwal self introduced himself and also his family members one by one. He requested Swamigal’s blessing for his daughters to get married.
Periyavaa spoke to Mr.Agarwal and before bidding send-off, he gave each of his two daughters one fruit, who were standing in front of him.
You said three daughters, where is the other one asked Periyavaa to me.
That girl was a bit shy and was standing behind her father.
Swamigal is calling you, please come front said myself in English. Periyavaa gave the third fruit to her. I later understood that she was the eldest.
After this incident I did not get the opportunity to meet my relative for a year. Later when we happen to get together, we talked about the Mumbai Businessman’s trip with family to have the Darshan of Mahaperiyavaa. I enquired if the girls got married.
It is a big surprise, started my relative with an enthusiasm and explained the whole detail.
It seems first the wedding of the second daughter got finalized. It was a good alliance, rich family and so they fixed the Muhurtham and printed the Invitation. Though the elder one did not regret, the parents were depressed inside. Only with a pessimistic feeling was the Businessman doing all the arrangements. Suddenly the son of a Crorepathi was interested to marry the first daughter. The bride also liked him. Both the parties were in full agreement. The engagement happened and when they were looking for a suitable date for Muhurtham there was a suitable day which was fortunately before the wedding date of the second daughter. All the arrangements took place in jet speed.
Mr.Agarwal and his family was so happy that it so happened that the wedding of his second
daughter took place after completion of the marriage of the eldest. It seems in a few months this blessed man performed the wedding of his third daughter too, in a very grand manner. !!!!Guruve Saranam!!!!
Categories: Devotee Experiences
ஒரே ஒரு தாரக மந்த்ரம் “யாம் இருக்க பயமேன்”, என்று அவர் கூறுவது போன்று உள்ளது. இந்த மந்த்ரம் இருக்கும் வரை உலகத்தில் எதைப் பற்றியும் கவலை என்ன?