Maha Sivaraathiri Special-The Position of “Siva” Naama in Vedhaas by Maha Periyavaa

Siva Nama

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Where does ‘SIVA’ Naamaa reside in Vedas? What is its position? The greatest master explains about it and the Greatness of the Two letter word ‘SIVA’. A small chapter but very informative. Let’s chant as much ‘SIVA’ naama as we can that has no restrictions as other manthras. Thanks to our Sathsangam volunteer team member for the translation (wish to remain anonymous). Siva Siva

வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம்

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான ‘சிவ’ நாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் ‘த்ரயீ’ என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் எனப்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக ‘சிவ’ என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் ‘மெய்ப்பொருள்’ என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக – மெய்யாக – வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது ‘சிவ’ நாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத(ன்) நாமம் நமச்சிவாயவே

வீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு ‘சிவ’ நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) “யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்” என்கிறார்.

The Position of “Siva” Naama in Vedhaas – By Maha Periyava

 

If we have a precious gem, where would we store it in the house? Will we keep it in a room facing the entrance door? Will we keep it in a room near to the garden in the backyard? We will try to keep it safely inside an iron box in an inner room at the center or the middle. Similar to this, the Vedhaas have safeguarded the gem of our lives, “Siva” Name. In 4, middle is considered to be 2. In the 4 Vedhaas, the second one is “Yajus” (Yajurvedhaa). Without including the “Atharvavedhaa”, “Rig”, “Yajus” and “Saamam” are together called as “Thrayee”. Even then, “Yajus” comes in between “Rig” and “Saamam”. “Yajus” is divided into two – “Sukla Yajus” and “Krishna Yajus”. Hence, if we 4 Vedhaas into 5, in “Rig”, “Sukla Yajus”, “Krishna Yajus”, “Saamam”, “Atharvam”, Krishna Yajus is in the middle. In the Krishna Yajus, the 4th chapter (Kaandam) is in the middle. This, in turn, has the fifth “Prasna” in the middle. In the middle of this fifth “Prasna” is “Sri Rudra Suktham” which has “Nama Sivaaya” or “Panchaaksharam” in the middle. In the “Panchaaksharam*”, the name “Siva”, which is the “Dwayaksharam**”, is at the center and most important position amidst the complete Vedhic Hymns in praise and prayer of Lord Siva in “Sri Rudra Suktham”.

According to us, our body is true. The “Paramaatmaa” or the “Divine Soul” inside us is said to be the “True Meaning” or “True thing” (“Meiporul”). What is called as “Sathvasthu” in Vedhaanthaa is called as “Meiporul” by Thiruvalluvar in Tamil. If we consider Vedhaas as the body that is true, the True meaning or the “MeiPorul” lies in the “Siva” name. If the soul or the “Paramaatmaa” is positioned at the heart in a body, the heart lies in the center of the body. The same is stated by Thiru Gnyaanasambandhar.

Vedha Naanginum Meiporulaavadhu
Naadhan Naamam NamaSivaayave

Just like how the precious gem (jewel) is safeguarded in the middle or center of the house, the precious life giving gem, “Siva” Name is present in the center of the body as “the Great Soul” or “Paramaatma”. The same is being stated by Sri Appayya Dikshithar in “Brahma Dharga Sathvam” (Sloka 27): Yath-Jeeva Rathnam Akilagama Laalaneeyam.

* – Panchaaksharam is represented by the 5 sanskrit letters “Na, Ma, Si, Va, Ya”
** – Dwayaksharam is represented by the 2 sanskrit letters “Si,Va”



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading