அர்க்கியமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ண வேண்டும். பின்பு காயத்ரீ பண்ண வேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ண வேண்டும். மூச்சைக் கொஞ்சம் நிறுத்துகிறது, பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தாலே போதும். அதிகம் அடக்க வேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப்ரதானம், ஜபம், ஸ்தோத்திரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேச்வரனுடைய அநுக்கிரஹம் பெறுவதற்காகப் பண்ணகிறேனென்று நினைத்துச் செய்ய வேண்டும். முதலில் பண்ணும் ஸங்கல்பம் என்பது அதுதான். ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேச்வரார்ப்பணம் பண்ண வேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். திரிகாலங்களிலும் இதை ஸ்வல்பமாவது பண்ணவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
After employing the arghiya weapon against the evil forces, we must perform Gayathri Japa. Pranayama must be done according to our ability, holding the breath for a while, then releasing it: this process may be repeated without controlling the breath for too long a time. All the steps in sandhyavandana- sankalpa, marjana, arghya-pradana, japa, stotra, abhivadana, is all for a purpose – the blessings of Isvara: this is stated in the sankalpa that we make at first. From beginning to end sandhyavandana is dedicated to Paramesvara and pranayama is an important part of it. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply